Monetize Your Website or Blog

Thursday, 18 February 2016

லெஸ்பியன், போதைப் பொருள் பயன்படுத்தல்... ஹிலாரி மீது கிளிண்டன் முன்னாள் காதலி பரபரப்பு புகார்!

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மீது, அவரின் கணவர் கிளிண்டனின் முன்னாள் காதலி ஒருவர், ஹிலாரிக்கு லெஸ்பியன், போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்தது என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அமெரிக்க அதிபராக பதவி வகித்துவரும் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர் மாதம் 8-ம்  தேதி நடத்தப்படவுள்ளது.  இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள வேட்பாளர்கள்,  நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பாக ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் அர்கன்சாஸ் பகுதியை சேர்ந்த சாலி மில்லர்ஸ் பெர்டியூ என்பவர்,  ஹிலாரி மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பெர்டியூ, அர்கன்சாஸின் முன்னாள் அழகியும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கும் இடையே நட்புறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் தனது கடந்தகால வாழ்க்கை தொடர்பான புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளார்.
அது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், " பில் கிளிண்டனை பற்றி நான் என்ன கூறினாலும் ஹிலாரி அதைப் பற்றி கவலைப்பட மாட்டார். ஆனால் ஹிலாரியை பற்றி பில் என்னிடம் கூறியதை வெளியில் தெரிவித்தால் அவர் ஆச்சர்யப்படுவார். ஹிலாரிக்கு செக்ஸில் நாட்டம் இல்லை என்று பில் என்னிடம் கூறியுள்ளார்.
மேலும் ஆண்களை விட பெண்களிடமே ஹிலாரிக்கு விருப்பம் இருப்பதாகவும்,அதனால் அவர் பெண்களுடன் நெருங்கிப் பழகினார் என்றும்,மேலும்  அவருக்கு போதைப்  பழக்கங்கள் உள்ளது என்றும் பில் என்னிடம் தெரிவித்திருக்கிறார் .பில் கிளிண்டன் என்னை பார்ப்பதற்காக பின்புற வாசல் வழியாக வருவார். கஞ்சா கலந்த சிகரெட்டுகள் மற்றும் கொக்கைன் போதைப்பொருட்களை அவர் பயன்படுத்துவார்.

எனக்கு  பிடிக்காது என்றாலும் அவர் எனது விருந்தினர் என்பதால் அவற்றை சகித்துக் கொள்வேன். என்னை மகிழ்விப்பதற்காக எனது ஆடைகளை பில் கிளிண்டன் அணிந்து நடனமும் ஆடுவார்" என்று கூறியுள்ளார். 


No comments:

Post a Comment