Monetize Your Website or Blog

Wednesday, 29 June 2016

டிரைவர் இல்லாமல் 15 கி.மீ ஓடிய ராஜ்தானி ரயில்

காராஷ்ட்ராவில் ராஜ்தானி  எக்ஸ்பிரஸ் ரயில் 15 கிலோமீட்டர் தொலைவு டிரைவர் இல்லாமலேயே ஓடியுள்ளது.


டெல்லி நிஜாமுதீன் - மட்கான் ராஜ்தானி  ரயில் மகராஷ்ட்ரா மாநிலம் ரத்னகிரி அருகே  ஒரு சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்த போது என்ஜீன் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.  ரயில் இறக்கத்தில் நின்று கொண்டிருந்துள்ளது.  டெக்னீஷியன்கள் வரவழைக்கப்பட்டு, கோளாறு சரி பார்த்து கொண்டிருந்த போது, ரயில் தானாக ஓடத் தொடங்கி விட்டது.
அந்த சமயத்தில்  ரயில் ஓட்டுநர்கள் என்ஜீனில் இல்லை. கார்டு அறையில்  பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.சுமார் 15 கிலோமீட்டர் தொலைவு அந்த  ரயில் இறக்கத்தில் டிரைவர் இல்லாமலேயே ஓடியுள்ளது.  பின்னர் மேடான பகுதி வந்ததும் ரயிலின் வேகம் குறைந்துள்ளது. இந்த சமயத்தில் ரயிலின் டிரைவர்  என்ஜீனுக்குள் சென்று பிரேக் போட்டு ரயிலை நிறுத்தியுள்ளார். பின்னர் மாற்று என்ஜீன் கொண்டு வரப்பட்டு ரயில் புறப்பட்டுள்ளது.



இந்த தகவலை அந்த  ரயிலில் பயணித்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் செய்தியாளர் உறுதி செய்துள்ளார். ஆனால் கொங்கன் ரயில்வே இதனை மறுத்துள்ளது. கொங்கன் ரயில்வேயின்  மேலாண் இயக்குனர் சஞ்சய் குப்தா, ''ரயில் சில அடி தொலைவு நகர்ந்துள்ளது இதுகுறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment