ஸ்ரீ பாலாஜி அறக்கட்டளைக்கு சொந்தமான தனியார் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். இதில், 80 கோடிக்கு மேற்பட்ட பணம் சிக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கத்தில் பாலாஜி அறக்கட்டளைக்கு சொந்தமான மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி, ராஜிவ்காந்தி பொறியியல் கல்லூரி, கஸ்தூரிபாய் செவிலியர் கல்லூரி ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கு 85 லட்சம் முதல் 1 கோடி வரை பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படிடையில், நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும் முக்கிய ஊழியர்களின் வீடுகளில் சோதனையிட்டனர். அரியாங்குப்பத்தில் உள்ள பொறியியல் கல்லூரி செய்தி தொடர்பாளர் ஜெரால்டு வீட்டில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 42 கோடி ரூபாய் சிக்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான, சென்னையில் உள்ள சத்யசாயி மருத்துவ கல்லூரியிலும் சோதனை நடந்துள்ளது. அங்கும், பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

திருப்போரூர் அருகே உள்ள நெல்லிக்குப்பம் அம்மா பேட்டையில் உள்ள சத்யசாய் மருத்துவக் கல்லூரியிலும் ரெய்டு நடந்தது. இதில் 30 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 8 கிலோ தங்ககட்டிகள் மற்றும் ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து நேற்றும் (25.06.16) கிழக்கு கடற்காரை சாலை, அக்கரை பகுதியில் உள்ள ராஜகோபாலின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை கைப்பற்றப்பட்ட பணம், தங்ககட்டிகள், ஆவணங்கள் என அனைத்தும் ரூ.100 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
யார் இந்த ராஜகோபால்..?
தமிழக அரசியல் மற்றும் பொதுவாழ்வில் மக்களால் அறியாதப்படாதவர் இராஜகோபால்.. இவர், சென்னை அசோக்நகரில் உள்ள கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் ரோட்டில் ஆரம்ப காலத்தில் மருந்து டிஸ்டிபியூட்டராக இருந்து வந்தவர். அதில் கிடைத்த வருமானத்தில், 2008ல் பாண்டிச்சேரியில் மெடிக்கல் கல்லூரியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சத்யசாய் மருத்துவக்கல்லூரியை ஆரம்பத்தார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்தக் கல்லூரியின் பங்குகள் தி.மு.க.வின் முக்கிய புள்ளி ஒருவருக்கு கைமாறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் அவசர அவசரமாக அந்த கல்லூரிகளுக்கு சாலைவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், ராஜகோபாலின் மறுபக்கம், மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

No comments:
Post a Comment