Monetize Your Website or Blog

Friday, 17 June 2016

வரி செலுத்துவோரின் நண்பர்களாக மாறுங்கள்! -வரித்துறை அதிகாரிகளுக்கு மோடி அட்வைஸ்

ங்கேற்ற வரித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடியபோது பிரதமர் மோடி, ''இந்தியாவில் வரி செலுத்துவது எப்படி? என யாராவது ‘கூகுள்’ தேடல் பொறியில் தேடினால், சுமார் 7 கோடி முடிவுகள் கிடைக்கும். அதேநேரம் ‘இந்தியாவில் வரிகள் கட்டாமல் தப்புவது எப்படி?’ என தேடினால் சுமார் 12 லட்சம் முடிவுகள் வருகிறது.

ஆனால் இந்திய மக்கள் இயல்பாகவே நேர்மையானவர்கள். உத்வேகம் மிகுந்த மக்களால் நிறைந்ததுதான் இந்தியா. எனவே வரிகளை செலுத்துவதற்கான எளிய வழிகளை அவர்கள் கண்டறிந்து விடுவார்கள். வரி செலுத்துவதில் மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் வரிகளை ஒழுங்காக செலுத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மிகவும் குறைவுதான்.



ஆனால் பிரச்னை என்னவென்றால், வரி செலுத்தும் அவர்களுடன் எந்த அளவுக்கு நாம் நட்புறவை வைத்திருக்கிறோம் என்பது தான். நீங்கள் அவர்களிடம் நம்பிக்கையை கட்டமைத்தால், அவர்கள் தங்கள் வரியை ஒழுங்காக செலுத்துவார்கள். இதன் மூலம் நீங்களும் உங்கள் இலக்கை அடையலாம்.

வரி செலுத்துவோரின் நண்பர்களாக நீங்கள் மாறினால், வரிகள் அனைத்தும் தானாகவே உங்களிடம் வந்து சேரும். இதற்காக வரி செலுத்துவோர், வரித்துறை அதிகாரிகள் இடையே நம்பிக்கை பாலத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக வரி நிர்வாகத்தை டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்த்த வேண்டும்.

வரி செலுத்துவோரிடம் மென்மையாகவும், மிருதுவாகவும் நடந்து கொள்வதன் மூலம், அவர்களிடையே காணப்படும் அடக்குமுறை, தொந்தரவு போன்ற அச்ச உணர்வுகளை போக்க வேண்டும். வரி ஏய்ப்பாளர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் உள்ளன. இதற்கு அஞ்சும் அவர்கள், வரி அதிகாரிகளை பார்த்து அச்சப்படும் நிலை இருக்கக்கூடாது.

வரி வசூல் தொகையை அதிகரிக்க நீங்கள் ‘விட்டுக்கொடுத்தலை’ கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும். மாறாக ஏய்ப்பாளர்களாக இருக்கக்கூடாது. அத்துடன் வரித்துறையின் 5 தூண்களான வருவாய், பொறுப்பு, நேர்மை, தகவல், டிஜிட்டல் மயம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை 5.43 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்த வேண்டும்" என்றார்.




No comments:

Post a Comment