பீகாரில், தேர்வுக்கான விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத மாணவர்களையெல்லாம் கூட பல்கலைக்கழகம் ஒன்று பாஸ் செய்திருக்கிறது.

முசாஃபர்பூரில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து, நிர்வாகத்திற்கு எதிராக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தினர். இளங்கலை பிரிவில், தேர்வுக்கான விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத 30 மாணவர்கள் பாஸாகியிருப்பது இதில் தெரிய வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, 'சம்பந்தப்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சதீஷ் தற்போது தெரிவித்துள்ளார். மறுமதிப்பீடுக்கு மாணவர்கள் விண்ணப்பித்தபோது, அவர்களின் விடைத்தாள்களை வெளியே எடுத்து பார்த்தபோதுதான், 30 மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரு வார்த்தை கூட எழுதப்படாமல் இருந்ததும், ஆனால் அவர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
வெற்றுத்தாளை வைத்து வெற்றி பெற்ற 30 மாணவர்களும் எல்என்டி கல்லூரியை சேர்ந்தவர்கள். பீகாரில் இது போன்று தொடர்ந்து கல்வி மோசடி சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

No comments:
Post a Comment