காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காக மாணவி ஒருவரை, ' இனி படிக்க வரக்கூடாது' என்று கல்லூரியிலிருந்து வெளியேற்றி, பரபரப்பை கிளப்பியிருக்கிறது சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி நிர்வாகம்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள பாதிக்கப்பட்ட மாணவியான காளியம்மாளிடம் பேசினோம்.
“ எனக்கு சொந்த ஊர் தும்பல்பட்டி. சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாமாண்டு படிக்கிறேன். மே மாத விடுமுறையில், என் சம்மதம் இல்லாமல் எங்க வீட்டுல எனக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சாங்க. நான் ஏற்கனவே மனோகர் என்பவரை காதலிச்சதால எனக்கு அந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை. அதனால், மனோகரையே நான் திருமணம் செஞ்சுக்கிட்டேன். எங்க வீட்ல ஆரம்பத்துல எதிர்த்தாலும் பிறகு ஒத்துக்கிட்டாங்க.
எங்க காலேஜ்ல படிக்கிற பொண்ணுங்களுக்கு கல்யாணம்னா, முன்னாடியே காலேஜ்ல சொல்லிடணும். லீவுங்குறதால என்னால சொல்ல முடியல. லீவ் முடிஞ்சு, காலேஜுக்கு போனதும், எங்க டிப்பார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி கிட்ட விஷயத்தை சொல்லிட்டேன். ஆனா, அவுங்க 'டி.சி வாங்கிகிட்டு போய்டு' னு சொல்லிட்டாங்க. எங்க அம்மாவையும் அழைச்சிக்கிட்டு போய் கேட்டுப்பார்த்துட்டேன். எவ்வளவோ கெஞ்சியும் பிரின்சிபல், ஹெச்.ஓ.டி, எல்லாம் சேர்ந்து, ' நீ டி.சி வாங்கிகிட்டு போயிடும்மா...' னு சொல்லிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல சார். நான் பழங்குடி இனத்தை சேர்ந்த பொண்ணு. எங்க சமுதாயத்துல பெண்களை இவ்ளோ தூரம் படிக்க வைக்கவே மாட்டாங்க. நான் ரொம்ப நல்லா படிப்பேன் சார். லவ் மேரேஜ் பண்ண ஒரே காரணத்துக்காக என்னை வெளியில போன்னு துரத்திட்டாங்க" என்றார் சோகத்துடன்.
இது தொடர்பாக சக்தி கைலாஷ் கல்லூரியின் மேனேஜர் சுரேஷிடம் பேசினோம். “அவுங்க அம்மாவை அழைச்சிக்கிட்டு வந்தாங்களா... ஃபீஸ் பணம் பெண்டிங் இருக்கா...?" என்றெல்லாம் கேட்டவர், "அவங்க அப்பா அம்மா ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் எங்களுக்கு என்ன சார் இருக்கு. வரச்சொல்லுங்க சேர்த்துக்கொள்கிறோம்..." என்று சொல்லியிருக்கிறார்.
இதை அந்த மாணவியிடமும் சொல்லியிருக்கிறோம்.
பார்க்கலாம்.!

No comments:
Post a Comment