கண்டிப்பு எச்சரிக்கை அதைத் தொடர்ந்து கண்ணீர் என்று உணர்ச்சிப் பிரவாகமாக நடந்து முடிந்துள்ளது சென்னையில் இன்று(சனிக்கிழமை) நடந்த அதிமுக செயற்குழு.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு செயற்குழு தொடங்கியது. இதில் கலந்துகொள்ள தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழிநெடுகிலும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். சிரித்த முகத்தோடு அலுவலகம் வந்த அவர், பால்கனியில் நின்று தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்து தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார். பின்னர் கூட்ட அரங்கிற்குச் சென்றார். உள்ளே செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி,திகில் இரண்டும் கலந்த உணர்வோடு அமர்ந்து இருந்தனர். இதில் எந்தப் புயல் அடிக்கும் என்ற குழப்பத்தில் அனைவரும் இருக்க, ஊடகங்கள் சம்பிரதாய புகைப்படம், வீடியோ எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பின்னர்,கதவு மூடப்பட்ட நிலையில், சுமார் ஒன்றரை நேரம் செயற்குழு நடந்துள்ளது.

செயற்குழுவில் நடந்த அதிரடி உணர்ச்சிமிகு காட்சிகள் என்ன என்பதை அதிமுக தலைமைக் கழக வட்டாரத்தில் விசாரித்தோம் . ' அம்மா இந்தமுறை செயற்குழு கூட்டத்தில் இப்படி அதிரடியாக பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். வெளியில் கட்சியினர் வழங்கிய வரவேற்பை சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்டு உள்ளே வந்த அவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பிரமுகர்கள், அமைச்சர்கள் நடத்திய உள்ளடி வேலைகளை ரகரகமாகப் பிரித்துக் கொட்டினார். யார் முகத்திலும் ஈயாடவில்லை.
முக்கியமாக முன்னாள் அமைச்சர் இருவரையும், இன்னாள் அமைச்சர் ஒருவரையும், தூத்துக்குடி மேயரையும் பிடிபிடியென பிடித்து கண்டிப்பின் உச்சத்துக்கே சென்றுள்ளார்'. "இதுவரை அதிமுகவில் தேர்தலில் உள்ளடி வேலை நடந்ததில்லை. ஆனால் இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் நீங்கள் உள்ளடி வேலைகள் செய்து, நாம் ஜெயிக்கவிட்டாலும் பரவாயில்லை அடுத்தவர் ஜெயிக்கக் கூடாது என்று செயல்பட்டு உள்ளீர்கள்.

உங்களுக்கு மீண்டும் சீட் கொடுத்து அமைச்சர் ஆக்கியுள்ளது எனக்குப் பிடிக்கவில்லை. சூழல்தான் இதற்குக் காரணம். தூத்துக்குடி மாவட்டத்தில் 40 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை.அது தேர்தலில் எதிரொலித்துள்ளது. இந்த நிலை தொடரக் கூடாது. இதற்கெல்லாம் முடிவு, வரும் உள்ளாட்சி தேர்தலில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து இருக்கிறது. அதன் பிறகே அடுத்து நான் என்ன செய்வேன் என்று தெரிவிப்பேன்.
எதிர்வரிசையில் 98 பேர் அமர்ந்து இருப்பது உங்கள் மனதில் உறுத்தலை ஏற்படுத்தவில்லையா? இந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் இடம் பிடித்தது உங்களின் உள்ளடி வேலைகளால்தான். என்னால் துரோகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. " என்று காட்டமாக பேசினார் என்றனர் தலைமைக் கழக வட்டாரத்தினர்.
பின்னர் தனது உடல்நலம் குறித்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்கள் கண்களில் கண்ணீர் கொட்டியது என்று உருக்கமாக தெரிவித்தனர் அதிமுக-வினர்
அதிமுக இன்னும் சில மாதங்கள் கழித்து நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு உணர்ச்சிக் கொந்தளிப்போடு தயாராகிவிட்டது.

No comments:
Post a Comment