Monetize Your Website or Blog

Saturday, 18 June 2016

ரகசியம் காக்கும் ரித்விகா கதாபாத்திரம்! கபாலி சீக்ரெட்



ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் கபாலி படத்தின் நெருப்புடா பாடல் டீஸர் நேற்றுவெளியாகி இணையத்தில் வைரல் ஹிட். முன்னதாக வெளியான படத்தின் டீஸர், கடந்த 12ம் தேதி வெளியான பாடல்கள் என்று ப்ரமோஷன்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டிவருகின்றன. 



அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களான ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், “அட்டகத்தி” தினேஷ், கிஷோர் மற்றும் தைவான் வில்லன் வரையிலும் டீஸரிலும், வீடியோவிலும் வந்துவிட்ட நிலையில், ஒரே ஒருவரின் தோற்றம் மட்டும் மிஸ்ஸிங். மெட்ராஸ் படத்தில் மேரி கதாப்பாத்திரத்தில் வந்த ரித்விகா தான் அது. 

ஏன் ரித்விகாவை மட்டும் வீடியோவில் காணவில்லை என்று விசாரித்ததில்,“ ரஜினிக்கு அடுத்தபடியாக முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பது ரித்விகா தானாம். இப்போது அவரின் படங்களோ, வீடியோவோ வெளியிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால் தான் வெளியிடவில்லை” என்று சொல்லப்படுகிறது. படம் வெளியாகும் தருவாயில் ரித்விகாவின் கதாப்பாத்திரம் சார்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகும் என்று தெரிகிறது. 
நமது பேட்டியில்கூட மகிழ்ச்சி ரஜினியின் பஞ்ச் ஆன ரகசியத்தைச் சொன்ன ரித்விகா, அவரது கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி பாக்கியெல்லாம் படம் வரட்டுமே’ என்றார். 
வி ஆர் வெய்ட்டிங்!



No comments:

Post a Comment