Monetize Your Website or Blog

Wednesday, 22 June 2016

மாணவர்களின் சாதிச் சான்றுடன் ஆதார் எண்ணை இணைக்கச் சொல்கிறது மத்திய அரசு!



பள்ளி மாணவர்களின் சாதிச் சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் சாதி, இருப்பிடச் சான்றுகள் பெறுவது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் கல்வி உதவித் தொகை பெறுவது ஆகியவற்றில் கால தாமதம் ஏற்படுவதாக பெருமளவில் புகார்கள் எழுந்தன. இதைக் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழில் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது.




      

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் ஆவணங்களை பரிசோதித்து சாதி சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழை வழங்குவது மாநில வருவாய்த் துறையினரின் பொறுப்பு ஆகும். 30 முதல் 60 நாட்களுக்குள் இந்த சான்றிதழை வழங்க வேண்டும். இதற்கான ஆவணங்களை மாணவர்களிடம் பெற்றுத்தருவது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு.

மாணவர்கள் 5-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு படிக்கும்போது, இந்த சான்றிதழ்களை வழங்கவேண்டும். 5-ம் வகுப்பா அல்லது 8-ம் வகுப்பா என்பதை முடிவு செய்த பிறகு, அந்த குறிப்பிட்ட வகுப்பில் அந்த ஆண்டு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மேற்கண்ட சான்றிதழ்களை வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

சாதி சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைத்து வழங்க வேண்டும். சான்றிதழ் தயாரானவுடன், அதை ‘செலோபேன்’ கவரில் வைத்து பள்ளி நிர்வாகம் மூலமாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளைப் பெற அந்த சான்றிதழ்களை மாணவர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.



எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் சந்திக்கும் சிரமங்களை தவிர்க்க, அவர்களுக்கு சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களும், மற்ற பிரிவு மாணவர்களுக்கு இருப்பிட சான்றிதழ் மட்டும் பள்ளிகள் மூலமாக வழங்க வேண்டும்." என்று கூறப்பட்டு உள்ளது.



No comments:

Post a Comment