Monetize Your Website or Blog

Wednesday, 22 June 2016

சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி தீனதயாளன் கைது!

சிலைக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆந்திர தொழிலதிபர் தீனதயாளன் கைது செய்யப்பட்டுள்ளார்.



சமீபத்தில், சென்னை ஆழ்வார்பேட்டை, மூரே தெருவில் ஏராளமான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்த இருப்பதாகவும் சிலை தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அங்கு சென்றனர். அப்போது வீட்டுக்குள் அருங்காட்சியகம் போல 300-க்கும் மேற்பட்ட சிலைகள் இருந்தன. இதையடுத்து, அந்த சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், அங்கு இருந்த ரஞ்சித், மான்சிங், குமார் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். வீட்டிலிருந்து சிலைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், பல்வேறு பகுதிகளிலிருந்து சிலைகள் கொள்ளையடித்து இங்கு கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் தீனதயாளன் என்பதும் தெரியவந்தது. தலைமறைவான தீனதயாளனை போலீஸார் தேடி வந்தனர்.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த தீனதயாளன், போலீஸில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் கடந்த இரண்டு வார காலத்திற்கும் மேல் விசாரணை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  தீனதயாளனை இன்று (21-ம் தேதி) போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.




No comments:

Post a Comment