பீகார் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி ரூபி ராய், மறுதேர்வில் தோல்வியடைந்தார். இதையடுத்து மோசடி செய்யததாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

பீகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், கலை பாடப்பிரிவில், 500-க்கு 444 மதிப்பெண் பெற்று ரூபி ராய் என்ற மாணவி முதலிடம் பெற்றிருந்தார். இதையடுத்து தொலைக்காட்சிகள், அவரிடம் பேட்டி கண்டன.
அப்போது அவர், அரசியல் அறிவியல் பாடத்தில் சமையல் பற்றிய பாடங்கள் இடம் பெற்றிருக்கும் என அந்த மாணவி கூறியது சந்தேகத்தை கிளப்பியது. அந்த பேட்டி சந்தேகத்தை எழுப்ப, அவரை மறுதேர்வு எழுதுமாறு உத்தரவிடப்பட்டது.
ஆனால் ரூபி மறுதேர்வு எழுதவில்லை. மேலும் அவரது தேர்ச்சி குறித்து ஆராய தனிக்ககுழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பல முறை சம்மன் அனுப்பியும் ரூபி தேர்வு எழுதவரவில்லை இறுதியாக நேற்று அவர் மறுதேர்வு எழுதினார். ஒரு கேள்விக்கு கூட மாணவி சரிவர பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

மறு தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக ரூபி ராயை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர். ரூபி ராய் மட்டுமல்ல அறிவியல் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சவுரப் சேஸ்தா, மாநில அளவில் 3வது இடம் பிடித்த ராகுல் குமார், விசுன் ராய் கல்லூரி முதல்வரின் மகள் ஷாலினி ராய் ஆகிய மேலும் 3 பேருக்கும் ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அறிவியல் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சேஸ்தா, தண்ணீருக்கும் ஹெச் 2 ஓவுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்ற கேள்விக்கு கூட பதில் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த வழக்கில் ஏற்கனவே மாநில தேர்வு வாரிய முன்னாள் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத், அவரின் மனைவி மற்றும் ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்.எல்.ஏ. உஷா சின்ஹா உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment