' தமிழக அரசின் சில வாரியங்களைப் பிரித்து, புதிய வாரியங்களை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது' என தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல்கள் தடதடக்கின்றன. 'கட்சி முன்னோடிகள் பலரையும் வாரியப் பதவிகளில் அமர வைப்பதற்காகத்தான் இந்தத் திட்டம்' என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று, புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு, வாரியத் தலைவர் பதவிக்கான முட்டல் மோதல்கள் தொடங்கிவிட்டன.
' அமைச்சர் அந்தஸ்துக்கு இணையானது வாரியத் தலைவர் பதவி என்பதால், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட தேர்தலில் தோற்றுப் போன பல முன்னணி நிர்வாகிகள் வாரியப் பதவியை குறிவைத்துக் காய் நகர்த்தி வருகின்றனர்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
அ.தி.மு.க தலைமைக்கழக வட்டாரத்தில், நம்மிடம் பேசிய கட்சியின் சீனியர் ஒருவர், "அரசின் கட்டுப்பாட்டில் கட்டுமானம், வீட்டுவசதி, வேளாண் விற்பனை உள்பட 11 வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, பாடநூல் கழகம் உள்பட 30 வகையான அரசுத்துறை சார்ந்த பதவிகளும் நிரப்பப்படவில்லை. கவுரவ அந்தஸ்து, அரசு வாகனம் என இந்தப் பதவிகளில் கிடைக்கும் மரியாதைக்காக, பல முன்னணி நிர்வாகிகள் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது வீட்டுவசதி வாரியத்திற்கு மட்டும் திருமயம் வைரமுத்து நியமிக்கப்பட்டிருக்கிறார். ' கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் பதவி கொடுக்க வேண்டும்' என முதலமைச்சர் நினைக்கிறார்.

அதற்காக, வாரியத்தின் எண்ணிக்கையை கூட்டுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. தொடக்கத்தில், சில வாரியங்களை ஒன்றிணைத்து ஒரே வாரியமாக மாற்றும் முயற்சி நடந்து வந்தது. இப்போது, புதிதாக பத்துக்கும் மேற்பட்ட வாரியங்களைக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்கள். இதனால், பரவலாக அனைவருக்கும் பதவி கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தெரிந்து கொண்டு, அதிகார மையங்களின் ஆசிர்வாதத்தோடு பதவியைப் பிடிக்க வேண்டும் எனப் பலர் சென்னையில் முகாமிட்டு வருகின்றனர். யார் யாருக்குப் பதவி என்பது மிகுந்த சஸ்பென்ஸாகவே இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்கின்றனர்.
நலவாரியங்களில் பதவிகள் நிரப்பப்படும்போது, தங்கள் நலனுக்காக வாரியப் பதவிகளை கட்சி முன்னோடிகள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் சரிதான்...!

No comments:
Post a Comment