Monetize Your Website or Blog

Friday, 17 June 2016

வெளிநாட்டில் தோனி ஓட்டிய 'பைக்' யாருடையது தெரியுமா?

ஜிம்பாப்வே நாட்டில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் கேப்டன் தோனி அந்நாட்டு போலீஸாரின் பைக்கை ஓட்டி அசத்தியுள்ளார்.






இந்திய அணித்தலைவர் தோனிக்கு பைக், கார் என்றால் அலாதி பிரியம். நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது சொந்த ஊரான ராஞ்சி நகரில் பைக்கில் ஊர் சுற்றுவார். வீட்டிலும் பல ரக பைக்குகளை அடுக்கி வைத்துள்ளார் தோனி. அவ்வப்போது தனது சமூகவலைதளத்தில் பைக்குடன் இருப்பது போன்ற புகைப்படங்களை அவர் பதிவேற்றுவார்.

இந்நிலையில் ஜிம்பாப்வேயில் இருக்கும் தோனி அந்நாட்டு போலீஸார் ஒருவரிடம் பைக்கை வாங்கி ஓட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஜிம்பாப்வே அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment