Monetize Your Website or Blog

Saturday, 18 June 2016

ரூ.7 கோடியில் யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்கம்..! டெல்லியிலிருந்து திறந்து வைத்தார் மோடி


இந்தியா சார்பில் 7 கோடி ரூபாய் செலவில் யாழ்ப்பாணத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கத்தை டெல்லியில் இருந்த படியே பிரதமர் நரேந்திர மோடி கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 



 

இலங்கை யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கம் 1997-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் ரூ.7 கோடி செலவில் இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1,850 பேர் அமரும் வகையில் இடவசதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்ட துரையப்பா விளையாட்டு அரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் இன்று கூட்டாக சேர்ந்து இலங்கை மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தனர். நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் இந்த விளையாட்டு அரங்கு அர்ப்பணிப்பு விழாவில் பங்கேற்றார்.

புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் முதல் பெரிய நிகழ்ச்சியாக இரண்டாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் சிறிசேனாவும் பார்வையிடுகிறார்கள். யோகா செயல்விளக்க நிகழ்ச்சியில் சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நேற்று இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 




No comments:

Post a Comment