வினுப்பிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் அண்ணாதுரையின் மகள் வினுப்ரியா (21). முகநூலில் அவரது படம் ஆபாசமாக வெளியிடப்பட்டது தொடர்பாக வினுப்ரியாவும், அவரது பெற்றோரும் மாவட்ட காவல் துறையிடம் புகார் செய்தனர். அந்த புகாரை, சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால், போலீசார், வினுப்ரியா மீதே சந்தேகம் தெரிவித்தும், அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் விசாரணையை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் போலீசார், வினுப்ரியாவின் தந்தை அண்ணாதுரையிடம் புதிய செல்போன் வாங்கித் தரும்படி நிர்பந்தம் செய்ததையடுத்து, அண்ணாதுரை ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஒன்றை போலீசாருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வினுப்ரியாவின் முகநூலில் மீண்டும் ஓர் ஆபாச படம் வெளியிடப்பட்டதால், மிகுந்த மனவேதனை அடைந்த அவர் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக வினுப்ரியாவின் தந்தை கூறும்போது, ''புகார் கொடுத்த பின்னர் வழக்குப் பதிவு செய்யாமலும், விசாரணையை முறையாக மேற்கொள்ளாமலும், முகநூல் பக்கத்தை முடக்காமலும் காலம் தாழ்த்தியதால்தான் என் மகள் வினுப்ரியா தற்கொலை செய்து கொண்டார். என் மகள் தற்கொலைக்கு போலீசார்தான் காரணம். காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது விசாரணை மேற்கொள்ளாமல் போலீசார் அலைக்கழித்தனர்.
முகநூல் பக்கத்தை முடக்குவதற்கு 20 நாள்கள் ஆகும் என்று தெரிவித்தனர். ஆனால், உறவினர் மூலம் முகநூல் பக்கத்தை சில மணி நேரத்தில் முடக்கினோம். இதுபோன்ற நிலை வேறு யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது. இந்த வழக்கில் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வினுப்ரியாவின் உடலை வாங்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
வினுப்ரியாவின் பெற்றோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வா.சம்பத்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். இந்த வழக்கை சேலம் சரக காவல் துறை டிஐஜி நாகராஜன் தலைமையில் விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் வா.சம்பத் பரிந்துரைத்தார்.
அதேபோல், வினுப்ரியாவின் படத்தை ஆபாசமாகச் சித்திரித்து வெளியிட்ட நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தற்கொலைக்குக் காரணமாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என வினுப்ரியாவின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் நேரில் சென்று சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, வினுப்ரியாவின் தற்கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். மரணத்துக்குத் தூண்டுதலாக இருந்த காவலர் மற்றும் செல்போன் பெற்றுக் கொண்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும்,காவலர்களின் பொறுப்பற்ற செயலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்புக் கோரினார். இதையடுத்து, வினுப்ரியாவின் பெற்றோர் உடலைப் பெற்று கொள்வதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று சேலம் கல்பாரப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்த செல்போன் மற்றும் சிம்கார்டை பறிமுதல் செய்த போலீசார், சுரேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment