Monetize Your Website or Blog

Saturday, 25 June 2016

ரோட்டில் சுற்றித் திரியும் சிறுவர்களை பள்ளியில் சேர்த்து விடும் போலீஸ் அதிகாரி!

ரோட்டில் சுற்றித் திரிந்த  சிறுவர்களை பிடித்து பள்ளியில் சேர்த்து விடும் பணியில் காங்கேயம் போலீஸ் அதிகாரி ஒருவர் ஈடுபட்டு வருகிறார். 


திருப்பூர்  மாவட்டம் காங்கேயம் பகுதியில் ஏராளமான நாடோடி மக்கள் வசித்து வருகின்றனர். கூடை பின்னியும், ரோட்டில் பேப்பர் ,பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதில் வரும் வருமானத்தை வைத்தும் கஷ்ட ஜீவனம் நடத்தும் இவர்கள், குழந்தைகளை மருந்துக்கு கூட பள்ளி பக்கம் அனுப்புவது கிடையாது. இது போன்ற நாடோடி வகுப்பை சேர்ந்த ஏராளமான குழந்தைகள், காங்கேயம் நகரம் முழுவதும் சுற்றி வந்து பிச்சையெடுப்பதையும் காண முடியும். 

இப்படி ஆங்காங்கே சுற்றித் திரிந்த சிறுவர்களை, காங்கேயம் போலீஸ் எஸ்.ஐ சாஸ்தான் இந்து சேகரன் பிடித்து விசாரித்தார். அப்போது சிறுவர்களின் நிலையை அவர்  தெரிந்து கொண்டார். பின்னர் அந்த சிறுவர்களின் பெற்றோர்களைப் பற்றி விசாரித்தார். தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் சாஸ்தா இந்து சேகரன் பேசினார்.  அவர்களிடத்தில் சிறுவர்களை படிக்க வைப்பதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

பெற்றோர் சம்மதத்துடன் முதல்கட்டமாக மகாலட்சுமி என்ற சிறுமியையும்,  ரஞ்சித், மாணிக்கம் என்ற சிறுவர்களையும்  அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேர்த்து விட்டார். அவர்களுக்கு புதிய உடைகள், வேண்டிய பாடப்புத்தகங்களையும் சாஸ்தா இந்து சேகரன் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார். 

இதனை பார்த்த மற்ற சிறுவர்களின் பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முடிவுக்கு வந்துள்ளனர். அவர்களையும் விரைவில் பள்ளியில் சேர்த்துவிட எஸ்ஐ சாஸ்தா இந்து சேகரன் முடிவு செய்துள்ளார். 




No comments:

Post a Comment