காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாட்டில் அவசரநிலையை பிரகடனம் படுத்த முயற்சி செய்தார் என்று பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக இருந்தபோது கடந்த 25-6-1975 முதல் 21-3-1977 வரை ‘மிசா’ என்னும் நெருக்கடிநிலை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை தடை செய்யப்பட்டிருந்தது. பத்திரிகை செய்திகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டன. அரசுக்கு எதிரான கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் போலீசாரின் கண்களில் இருந்து தப்பித்து பிறமாநிலங்களில் தலைமறைவாக மாறுவேடத்தில் வாழ்ந்தனர். இந்த அவசரநிலை சட்டம் நாட்டின்மீது திணிக்கப்பட்ட 41-ம் ஆண்டு ‘கருப்பு தினம்’ நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டு பேசும்போது, ''ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தபின்னர் குறிப்பிடத்தக்க அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் காரணத்தினால் இனியாரும் அவசரநிலையை பிரகடனம் படுத்த முடியாது.
மேலும், தேசத்தில் இந்துத்துவா பயங்கரவாதம் அதிகரித்து விட்டதாக காரணம் காட்டி, கடந்த 2011-12-ல் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்த சோனியா காந்தி முடிவு செய்திருந்தார், ஆனால் அதனை கடைசி நேரத்தில் கைவிட்டார். இதுதொடர்பான முழு தகவல்களையும் விரைவில் வெளியிடுவேன்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஐ.ஐ.டி. படிப்பிற்கான போட்டி தேர்வு எழுதவில்லை, தவறான வழியில் நுழைந்துள்ளார், அவரது டிகிரியில் எனக்கு சந்தேகம் உள்ளது" என்றும் கூறி உள்ளார்.

No comments:
Post a Comment