மாநகராட்சி மேயரை நேரடியாக தேர்வு செய்யும் முறையை ரத்து செய்துவிட்டு, மறைமுகமாக தேர்வு செய்யும் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் ' மசோதா மீதான வாக்கெடுப்பில் சபாநாயகர் வாக்களித்தது சரிதானா' எனக் கொந்தளிக்கின்றனர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்.
சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் பதில் உரைக்குப் பின், மேயர் நேரடி தேர்வு முறை ரத்து மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தி.மு.க சட்டமன்றக் கொறடா சக்கரபாணி எழுந்து, ' மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்கு ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்' எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், ' மசோதாவிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களைக் கணக்கிட்டு ஓட்டெடுப்பு நடத்தப்படும்' என்றார். இதையடுத்து, ' ஆதரிப்பவர்கள் எழுந்து நிற்கலாம்' எனச் சொல்ல, முதல்வர் உட்பட அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர்.

இதன்பின்னர் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்றனர். இவர்களைக் கணக்கிட்டு, '132 பேர் மசோதாவிற்கு ஆதரவாகவும் 88 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்' என்றார் சபாநாயகர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த தி.மு.க எம்.எல்.ஏக்கள், ' சபாநாயகர் எப்படி ஓட்டளிக்கலாம்?' எனக் கேட்க, ' ஓட்டுப் போடுவதற்கு சபாநாயகரான எனக்கு உரிமை உள்ளது' எனத் தெரிவித்தார் தனபால். இதையடுத்து, சட்டசபையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
"சபாநாயகர் பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நடுநிலையான பதவி. ஆளுங்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றுசேர்ந்துதான் சபாநாயகரை பதவியில் அமர வைக்கின்றனர். புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும்போது, சபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை சரிசமமாக இருந்தால், சபாநாயகர் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்யலாம். அதுவும் நெருக்கடியான சூழலில்தான் ஓட்டளிக்க வேண்டும். இப்போது சட்டமன்றத்தில் அ.தி.மு.கவிற்கு போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர். இதில், ' நானும் ஓட்டுப் போட்டேன்' என சபாநாயகர் தெரிவிக்க வேண்டிய அவசியமே எழவில்லை. இதன்மூலம் தேவையற்ற சர்ச்சைதான் ஏற்படுகிறது. சட்டமன்றத்தின் மரபுகள் காக்கப்பட வேண்டும்" என்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதரணி.
' உள்ளாட்சியில் அ.தி.மு.கவினரே அதிக பதவிகளில் அமர வேண்டும்' என்பதற்காகத்தான், சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது என்ற சர்ச்சை வலுத்துவரும் வேளையில், மசோதாவை நிறைவேற்றுவதிலும் சர்ச்சையா? என ஆதங்கப்படுகின்றனர் தி.மு.கவினர்.

No comments:
Post a Comment