Monetize Your Website or Blog

Saturday, 18 June 2016

ஹாரிபாட்டர் வில்லனான கதை! “Now You See Me” படம் எப்படி?

முதல் பாகம், ஐந்து மடங்கு பணத்தை அள்ள, “நௌ யூ சீ மீ” படத்தின் தயாரிப்பு குழு, இரண்டாம் பாகம் பற்றி யோசித்து இருப்பார்கள். ஆனால், படம் முதல் பாகம் அளவுக்கு இருந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள திரையரங்கிற்குள் நுழைந்தோம்.


முதல் பாகத்தின் இறுதியில் போலீஸிடம் இருந்து தப்பித்த, நான்கு ஹார்ஸ்மென்களும், ரகசிய குழுவில் இருந்து அழைப்பு வருவதற்காக பதுங்கி வாழ்கிறார்கள். ஹார்ஸ்மென்களின் தலைவரான மார்க் ரஃபலோ (Mark Ruffalo), அடுத்த அசைன்மென்ட் தருகிறார். அங்கு இவர்கள் மாயாஜால வித்தைகளை அவிழ்த்தவுடன், இவர்களே வில்லன் டேனியல் ரேடிக்லிஃபிடம் (அட, நம்ம ‘ஹாரி பாட்டர்’ ஹீரோ ) மாட்டிக் கொள்கிறார்கள்.
ரேடிக்லிஃப் சொல்லும் விஷயங்களை ஹார்ஸ்மென்கள் செய்தார்களா?, எப்படி தப்பித்தார்கள், முதல் பாகத்தின் வில்லன் மார்கன் ஃபிரீமென் என்ன ஆனார் என முடிகிறது கதை.


ஆரம்ப காட்சி முதல் BeLive, faint என்பதை தலைகீழாக்கி thief போன்ற வார்த்தை ஜாலங்களுடன் ஆரம்பிக்கிறது படம். முதல் பாகத்தில் வந்த இஸ்லா ஃபிஷருக்கு பதிலாக லிஸ்ஸீ கெப்லான் இந்த படத்தில் பெண் மெஜிசியனாக வருகிறார். முதல் பாகத்தில் வரும் மாயாஜால காட்சிகளில் இருக்கும் எதிர்பார்ப்பு ஏனோ, இரண்டாம் பாகத்தில் பெரிதாக இல்லை.
சீனா, அமெரிக்கா, லண்டன் என படம் டேக் ஆஃப் ஆனாலும், கதை டேக் ஆஃப் ஆக மறுக்கிறது. ஆரம்பத்தில் வரும் தொழிலதிபர் ஓவன் கேஸ் காட்சி, கட்டிடத்தினுள் சென்று கருவியை திருடும் காட்சி போன்ற காட்சிகள் மட்டும் மேஜிக் ஸ்பெஷல்.
முதல் பாகத்தில் மார்கன் ஃப்ரீமென், மெயின் வில்லன் மைக்கல் கெய்ன் ஆகியோரை ஏமாற்றும் ஹீரோக்கள், இந்த பாகத்தில் வரும் இறுதிக் காட்சியில் ரசிகனை ஏமாற்றுவது போல், எடுத்து இருப்பது பெரிய அளவில் சோபிக்கவில்லை. வில்லனாக நடித்து டேனியல் ரேடிக்லிஃபும், காமெடி வில்லன் போல் காட்சி அளிப்பதால், அடப்போங்க பாஸ் என்பது போல் தான் இருக்கிறது.
மல்ட்டி ஸ்டார் காஸ்டிங் என்றாலும், எங்குமே நகராத கதையில் அனைத்தும் வீணாக இருக்கிறது.  
இறுதியில் கொடுக்கப்படும் மார்கன் ஃப்ரீமென் ட்விஸ்ட் எல்லாம் தமிழ்ப்படத்தில் வரும் பரவை முனியம்மா வில்லி லெவல் என திரைக்கதை எழுதிய எட் சாலமனுக்கு சொல்லிக்கொள்கிறோம்.





No comments:

Post a Comment