Monetize Your Website or Blog

Wednesday, 22 June 2016

காதல் திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்துக் கொலை..! நாமக்கல்லில் ஆணவக் கொலை?

நாமக்கல்லில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஒருவர், கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சாதி ஆணவத்தின் காரணமாகவே, இந்த கொலை நடந்திருப்பதாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



          

வேலூரைச் சேர்ந்த சுமதி என்பவரும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் காதலித்து கடந்த 2008 ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். திருமணத்தை சுமதியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். ஆனால், சந்தோஷின் பெற்றோர் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், சந்தோஷூம் சுமதியும் நாமக்கல்லில் தனியாக வசித்து வந்தனர்.

வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த சந்தோஷ், ஓசூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால், நாமக்கல்லில் சுமதி தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி நேற்று சடலமாக கிடந்தார். 

சுமதி வீட்டிற்கு சந்தோஷின் தாயார் வந்ததாகவும், அதனைத் தொடர்ந்தே சுமதி கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் சுமதியின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாதி ஆணவத்தின் காரணமாகவே கொலை நடந்திருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 




No comments:

Post a Comment