பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, வாகன ஓட்டிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் ஆகியவற்றுக்கு ஏற்ப, நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி பெட்ரோல்-டீசல் விலை கடைசியாக கடந்த 17 ஆம் தேதி உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.26 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வின்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.62.47 காசுகளாக இருந்தது, தற்போது ரூ.65.04 காசுகளாக உயர்ந்துள்ளது. இதேபோல், டீசலின் விலை முன்பு லிட்டருக்கு ரூ.53.09 காசுகளாக இருந்தது, தற்போது ரூ.55.44 காசுகளாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சர்வதேச சந்தையில் நிலவும் பெட்ரோல், டீசல் பொருட்கள் மீதான விலை மற்றும் இந்திய ரூபாய், அமெரிக்க டாலர் இடையேயான மாற்று விகிதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்த்தப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரி விதிப்பில் மாறுபாடு நிலவுவதால், அந்தந்த மாநிலங்களில் அவற்றின் விலையிலும் மாற்றம் காணப்படும். அதன்படி டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.65.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் முந்தைய விலை ரூ.63.02 காசுகள் ஆகும். டீசலின் விலை லிட்டருக்கு ரூ.51.67 காசுகளில் இருந்து ரூ.53.93 காசுகளாக உயர்ந்துள்ளது.

இந்த அதிரடி விலை உயர்வு, வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment