Monetize Your Website or Blog

Wednesday, 1 June 2016

வாலிபரை அடித்தாரா சூர்யா... நடந்தது என்ன?

இளைஞர் ஒருவரை நடுரோட்டில் அறைந்ததாக சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாரிமுனையைச் சேர்ந்த பிரேம்குமார் நேற்று மாலை அடையாறு மலர் மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது முன்னால் காரில் சென்ற பெண்மணி திடீரென பிரேக் அடிக்க பின்னால் வந்துகொண்டிருந்த பிரேம்குமார், அவர் கார்மீது மோதித் தடுமாறி கீழே விழுந்தார்.


கீழே விழுந்ததில் வாகனம் சேதமாக , பிரேம்குமார் காரில் வந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்குப் பின்னால் காரில் சூர்யா வந்திருக்கிறார். பொது இடத்தில் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் கண்டு அந்த இளைஞரை கன்னத்தில் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தமக்கு அவமானம் ஏற்பட்டதாக நடிகர் சூர்யா மீது புகார் கொடுத்துள்ளார், பிரேம்குமார், இவர் சுங்கத்துறை கால்பந்து அணிக்காக விளையாடி வரும் கால்பந்து வீரர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
சூர்யா தரப்பில் , நடுரோட்டில் இரண்டு வாலிபர்கள் வயதான பெண்ணிடம் தவறாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உடனே சூர்யா விசாரித்து போலீஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு தனது உதவியாளரை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றதாகவும், சூர்யா இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் சூர்யா அடித்ததாகப் தவறான புகார் கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளனர். எனினும் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. யார் பக்கம் தவறு என்பது விசாரணைக்குப் பின்னரே தெரியவரும். சமீபத்தில்தான் 100% வாக்குக்காக விளம்பரத்தில் நடித்த சூர்யா, வாக்களிக்க முடியாமல் போனதற்கு

 கடிதம் மூலம் மன்னிப்புக் கேட்டார்.  இப்போது அடுத்த பிரச்னை
”எங்களை அடித்துவிட்டு சூர்யா சென்றுவிட்டார், எங்களை ஏதும் செய்துவிடுவார்களோ என பயமாக இருக்கிறது” என்று அந்த இளைஞர்கள் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.




No comments:

Post a Comment