Monetize Your Website or Blog

Tuesday, 7 June 2016

கூட்டணி ஆட்சிக்கு உடன்பட்டிருந்தால் விஜயகாந்த் தி.மு.க.வோடு இணைந்திருப்பார்! -திருமாவளவன்

கூட்டணி ஆட்சிக்கு உடன்பட்டிருந்தால் விஜயகாந்த், தி.மு.க.வோடு இணைந்திருப்பார். தி.மு.க. ஆட்சியை பிடித்து இருக்கும்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

அரியலூர் மாவட்டம், அங்கனூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ''தமிழக அரசும் எதிர்க்கட்சியும் இணக்கமாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இதற்கு மக்கள் நலக்கூட்டணியும் ஒரு காரணம்.


அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கு அரசியல் உறவு ஏற்படும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கணித்துள்ளார். கட்சிகள் அவரவர் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். இது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.

காட்டுமன்னார்கோவில் தொகுதி வாக்கு எண்ணிக்கையில், தற்போதுள்ள ஆளுங்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளனர் என மக்களே உணர்ந்திருக்கிறார்கள். எனவே மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன். இந்திய தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து விடுதலை சிறுத்தைகளின் சார்பில் மனு கொடுக்க உள்ளோம்.



கூட்டணி ஆட்சி என்கிற கருத்துக்கு உடன்பட்டிருந்தால், விஜயகாந்தே தி.மு.க.வோடுதான் கூட்டணி அமைத்திருப்பார். தி.மு.க.வும் ஆட்சியைப் பிடித்து இருக்கும். இது நிதர்சனமான உண்மை. ஆனால் தி.மு.க., பிடிவாதமாக கூட்டணி ஆட்சிக்கு உடன்படவில்லை. அதையும் வெளிப்படையாகவே அறிவித்தது. அதன் பிறகுதான் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணியோடு இணைகின்ற ஒரு சூழல் ஏற்பட்டது.

மேலும், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் 6  கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவெடுத்து இது குறித்து பின்னர் அறிவிப்போம். நாங்கள் முன்வைத்திருக்கிற இந்த மாற்று அரசியல் மகத்தானது. எனவே இந்த ஆறு கட்சி கூட்டணித் தொடர வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகளின் விருப்பம்" என்றார்.



No comments:

Post a Comment