இந்தியா இளம்தலைமுறையினர் கொண்ட நாடு என்பதையும், அந்த இளம்தலைமுறையினர் எத்தகைய திறமையை கொண்டவர்கள் என்பதையும் அமெரிக்கா அறியும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார்.
ஆப்கானிஸ்தான், கத்தார், ஸ்விட்சர்லாந்து நாடுகளைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் வாஷிங்டனுக்குச் சென்ற மோடி, வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், பொருளாதாரம், பயங்கரவாதம், தூய எரிசக்தி, பருவநிலை மாற்றம், பிராந்தியப் பாதுகாப்பு, இணையவெளி (சைபர்) பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், அதிபர் ஒபாமாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாசெய்தியாளர்களிடம் கூறும்போது, ''எனது நண்பர் மோடியை ஓவல் அலுவலகத்தில் மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆக்கப்பூர்வ அணுசக்தி துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இணையவெளி பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இந்தியாவின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் அணுசக்தி தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. ஆகையால், அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி.) இந்தியா உறுப்பினராவதை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்தியா இளம்தலைமுறையினர் கொண்ட நாடு என்பதையும், அந்த இளம்தலைமுறையினர் எத்தகைய திறமையை கொண்டவர்கள் என்பதையும் அமெரிக்கா அறியும். எனவே எதிர்காலத்திலும் இருநாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு உள்ளது" என்றார்.

அதன்பின் பிரதமர் மோடி கூறும்போது, ''இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை புதிய உச்சத்துக்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். பொருளாதார உறவில் புதிய உச்சம்: வணிகம், தொழில்நுட்பம் முதல் நிர்வாகம் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்தும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
உலகின் மிகப்பெரிய 2 ஜனநாயக நாடுகளாக இந்தியாவும், அமெரிக்காவும் திகழ்கின்றன. இருநாடுகளும், தங்களுக்கு எதிரான சவால்களுக்கு எதிராக மட்டுமன்றி, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு எதிராகவும் தோளோடு தோள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவும், அமெரிக்காவும் பருவநிலை மாற்றம், அணுசக்தி பாதுகாப்பு, பயங்கரவாதம் போன்ற சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. நண்பர்கள் என்ற முறையில் மட்டுமல்லாது, இரு நாடுகளுக்கு இடையேயான இந்த உறவைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். எதிர்காலத்திலும் இரு நாடுகளும் தோளோடு தோள் இணைந்து செயல்படும்.
அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பு (என்எஸ்ஜி), ஏவுகணைகள் தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பு ஆகியவற்றில் இந்தியா உறுப்பினராவதற்கு அதிபர் ஒபாமா மீண்டும் ஆதரவு தெரிவித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற என்னை அழைத்ததற்கு அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடாக தன்னை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் புதிய துறைகளில் தங்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா இளம்தலைமுறையினரைக் கொண்ட நாடாகும். இந்தியாவில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் 80 கோடி பேர் 35 வயதுக்கும் குறைவான வயதினர் ஆவர். புதிய உச்சங்களை அடைவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவில் இருக்கும் இளம்தலைமுறையினர் பணியாற்றுவார்கள்." என்றார்.
இந்தியப் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் சந்தித்து பேசுவது இது 2-வது முறையாகும். அதேபோல் இது, இரு தலைவர்களுக்கு இடையே நடக்கும் 7-வது சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment