
நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அழகிரியின் ஆதரவாளராக இருந்த நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ், தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். பிறகு அ.தி.மு.க. கூட்டங்களில் பங்கேற்ற பேசி வந்தார். சமீபத்தில் சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றார் ரித்தீஷ். அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார். உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு இதயத்தில் கோளாறு இருப்பதை கண்டறிந்தனர். ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவல் தெரிந்ததும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, நடிகரும், அ.தி.மு.க பிரமுகருமான விஜய்கார்த்திக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரித்தீஷின் உடல் நிலை குறித்து விசாரித்து சென்றுள்ளனர்.

No comments:
Post a Comment