Monetize Your Website or Blog

Saturday, 23 July 2016

29 பேர்களுடன் மாயமான விமானம்: தேடும் பணி தீவிரம்... பிற நாடுகளிடம் உதவி கேட்கிறது இந்தியா!


சென்னை, தாம்பரம் விமானத்தளத்திலிருந்து புறப்பட்டுச் சென்று காணாமல்போன விமானப்படை  விமானத்தைப்பற்றிய தகவல்கள் ஏதேனும் கிடைத்தால் அதை தெரிவித்து, தேடுதல் பணியில் உதவுமாறு இலங்கை, மலேஷியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


சென்னை, தாம்பரம் விமானத்தளத்திலிருந்து இருந்து இன்று காலை சுமார் 9 மணி அளவில் அந்தமான் போர்ட்பிளேருக்கு புறப்பட்டுச் சென்றது ஏ.என் 32 என்ற  இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம்.  29 பேருடன் புறப்பட்டுச் சென்ற அந்த விமானம்,  புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. 

கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்ந்து விமானத்தை தொடர்பு கொள்ள முயன்றும், முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் விமானத்தில் சென்ற 29 பேரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே விமானம் காணாமல்போனது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை அதிகாரி ஒருவர், " விமானம் 2300 அடி துாரத்தில் பறந்துகொண்டிருந்தபோதுதான் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானத்தை தேடும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. காணாமல் போன விமானத்தைப்பற்றிய தகவல்கள் ஏதேனும் கிடைத்தால் அதை தெரிவித்து, தேடுதல் பணியில் உதவுமாறு இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளோம்.



விமானம் கடலில் விழுந்திருந்தால் கருப்புப் பெட்டியின் மூலம் அது தெரியவரும். காணாமல் போன விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 4 மணிநேரம் பறக்கும். சென்னையிலிருந்து இருந்து 200 கடல்மைல் தொலைவில் காணாமல் போன விமானத்தை தேடும் பணி நடைபெறுகிறது. விமானத்தை தேடும் பணியில் மேலும் 4 டார்னியர் ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

விமானத்தில் கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர், கடற்படையைச் சேர்ந்த 11 பேர் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 5 பேர் உள்பட 29 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் மனித தவறுகளால் விபத்து நேரிட வாய்ப்பு மிகக் குறைவு. விமானத்தில் அதிகளவு தொழில்நுட்ப இயந்திரங்கள் உள்ளன. இயந்திரக்கோளாறுகளால் ஏதேனும் நிகழ்ந்திருக்கலாம் " என்று தெரிவித்தார்.



No comments:

Post a Comment