Monetize Your Website or Blog

Monday, 25 July 2016

அமெரிக்காவில் வாக்கிங் செல்லும் ரஜினி... வைரல் வீடியோ!


மெரிக்காவில், ரஜினிகாந்த் வாக்கிங் செல்லும் காட்சியின் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


மெரிக்காவுக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்,  வெர்ஜினா நகரில் உள்ள சச்சிதானந்தா சுவாமிகளின் கோயிலில் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் வணங்குவது போன்ற படங்களும், அந்த கோயில் வளாகத்தில் நடந்துவரும் ரஜினி, தனக்கே உரிய பாணியில் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வணக்கம் தெரிவிப்பது போன்ற புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.



அதன் பின், அவர் நடித்துள்ள கபாலி திரைப்படத்தை, ரசிகர்களுடன் ரஜினிகாந்த் பார்த்தபோது எடுக்கப்பட்ட படங்களும் வெளியாகின.
இந்நிலையில், அமெரிக்காவில் ரஜினிகாந்த் வாக்கிங் செல்லும் காட்சி, வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. சாலையின் ஓரத்தில் வாக்கிங் செல்லும் ரஜினியைக் கண்ட ரசிகர் ஒருவர், உடனே அதை தனது செல்போன் மூலமாக வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார்.
கபாலி திரைப்படம்  தமிழகம், இந்தியா ஏன் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  அமெரிக்காவில் ரஜினிகாந்த் வாக்கிங் செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ, இணையதளங்களில் வெளியாகி, அவரது ரசிகர்களை மேலும் பரவசப்படுத்தி உள்ளது.



 
 

 

No comments:

Post a Comment