Monetize Your Website or Blog

Thursday, 28 July 2016

மீனவர் வலையில் பல்சர் பைக்! - வலை விரிக்கும் சந்தேகங்கள்

புதுக்கோட்டை மணமேல்குடி அருகே கடலில் மீனவர் வலையில் சிக்கிய பல்சர் பைக், தீவிரவாதிகள் பயன்படுத்தி வீசி எறிந்ததா, என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகம் முழுக்க மாவோயிஸ்டுகள் வேட்டை நடைபெற்று வருகின்றது. இதுவரை நான்கு பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகளின் 'ஆப்ரேஷன் முச்சந்தி' தடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் போலீசார்.


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த கிருஷ்ணாஜி பட்டினத்தை சேர்ந்த ராஜா முகமது, சுல்தான் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீன்பிடிப்பதற்காக நாட்டுப் படகுடன், கடலுக்கு சென்றுள்ளனர். வழக்கம்போல கடலில் வலையை வீசிவிட்டு மீன் சிக்குவதற்காக அவர்கள் இருவரும் அன்று இரவு வரை காத்திருந்துள்ளனர். அப்போது வலையில் கனமான பொருள் ஒன்று சிக்கியது. மீன் என நினைத்து வீசிய வலையை இழுத்திருக்கின்றனர்.

ஆனால், அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. வலையை மேலே இழுக்க முடியாததால் மீனவர் ராஜா முகமது, கடலுக்குள் குதித்து வலையில் என்ன சிக்கி இருக்கிருக்கிறது என தேடிப் பார்த்திருக்கிறார். அப்போது, வலையில் ஒரு பல்சர் மோட்டார் சைக்கிள் சிக்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பதறிப்போன சுல்தானும், ராஜா முகமதுவும், மீனவர் உதவி இலவச தொலைபேசி எண்ணான 1093-ஐ அழைத்துத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, மணமேல்குடி கடலோர பாதுகாப்புப் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், சப்–இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான போலீசார் உடனடியாகக் கடலுக்குள் சென்று வலையில் சிக்கி இருந்த மோட்டார் சைக்கிளை மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.



வலையில் சிக்கியது  சிவப்பு நிற புதிய பல்சர் பைக். ஆனால் அதில் பதிவு எண் இல்லை. அதிகம் பயன்படுத்தப்படாத அந்த பைக், ஏன் கடலில் கிடந்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும். சமீபகாலமாக தீவிரவாத ஊடுருவல் கடலோரப் பகுதிகளில் அதிகம் உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், அந்த பைக்கை கடல் வழியாக வந்த தீவிரவாதிகள், கரைக்கு வந்ததும் பயன்படுத்துவதற்காக படகில் கொண்டு வந்திருக்கலாம்.
அப்போது போலீசாரோ, கடற்படையோ எதிர்பட்டதால் பைக்கை மட்டும் கடலுக்குள் தள்ளிவிட்டு அவர்கள் தப்பித்தார்களா, அல்லது இந்த பைக்கிற்கு சொந்தமான நபர் யாரையாவது கொலை செய்துவிட்டு கடலுக்குள் வீசி எறிந்துவிட்டு, தடயத்தை மறைக்க மோட்டார் பைக்கையும் கடலுக்குள் வீசிவிட்டு சென்றார்களா என பல கோணங்களில் கடலோர பாதுகாப்புப் படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக, கடலுக்குள் இருந்து மீட்கப்பட்ட பைக்கில் பதிவு எண் இல்லாததால், பைக்கின் என்ஜின் எண்ணை வைத்து, அந்த பைக் யாரால், எப்போது, எங்கு வாங்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.




No comments:

Post a Comment