சென்னையோட அடையாளங்கள்ல ஒன்னு எல்.ஐ.சி கட்டடம். அந்த எல்.ஐ.சி. கட்டடத்தோட அடையாளம் ப்ளூ கலர். ஆனா இப்போ கெட்டப் சேஞ்சாகி பளிச்சுனு லைட் மஞ்சள் கலருக்கு மாறி மின்னுது எல்.ஐ.சி.
இந்த திடீர் சேஞ் ஓவர்க்கு என்ன காரணம்னு விசாரிக்கையில், ''லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியாவோட 60ஆம் ஆண்டு கொண்டாட்டம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படுது. அதை முன்னிட்டு இந்தியாவுல உள்ள அனைத்து எல்.ஐ.சியின் கட்டடத்திற்கும் வெள்ளையடிக்கப்படுது'' என்றார், எல்.ஐ.சியின் மண்டல அதிகாரி என்.பிரபாகர ராவ்.

இந்த மஞ்சள் கலர் சேஞ்சுக்கு என்ன காரணம்னு கேட்கும் போது, ''ஒரே மாதிரியான கலர் இருந்தா மக்களுக்கு போர் அடிச்சிரும். அதனால தான் இந்த சேஞ்'' என்று கூறினார்.
சென்னை மக்களால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும் எல்.ஐ.சின் கலர் சேஞ். ஏன்னா எல்.ஐ.சி ஒரு கட்டடம் மட்டும் இல்ல. அது சென்னை மக்களோட எமோஷன்.

No comments:
Post a Comment