அவர்களுக்கு என்ன வேண்டும்...?
பெரும் பணமா, வைர நகைகளா, விலை மதிப்புமிக்க ஆடைகளா... என்ன வேண்டும் அவர்களுக்கு...? நிச்சயம், இது எதுவும் வேண்டாம். அவர்களுக்கு தேவை தகவல்கள். உண்மையான தகவல்கள். தாங்கள் தங்குவதற்கு எங்கு ஒரு துண்டு நிலம் கிடைக்கும், பாதுகாப்பான ஆறு மணி நேர உறக்கம் எங்கு கிடைக்கும், தம் பச்சிளங்குழந்தைகளுக்கு யார் உணவு தருவார்கள், இருள் அப்பிய தங்கள் எதிர்காலத்தில் யார் சிறு வெளிச்சம் பாய்ச்சுவார் என்ற தகவல்கள்.
ஆம். அவர்களுக்கு தகவலன்றி வேறொன்றும் தேவையில்லை.
யார் அவர்கள்...? :
யார் அவர்கள்...? :
அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் பெயர் இருக்கலாம். ஆனால், இப்போது அவர்களுடைய பெயர் அகதிகள். இப்படிச் சொல்ல உங்கள் மனதிற்கு கடினமாக இருக்கிறதா...? வேண்டுமானால் ஏதிலிகள் என்று அழைத்துக் கொள்ளுங்கள். அதுவும் இந்த ஏதிலிகள் நமக்கு அவ்வளவு முக்கியமானவர்கள் இல்லை. செய்திதாள்களில் எப்போதும் சர்வதேச பக்கங்களில் மட்டுமே தென்படுபவர்கள். சிரியா, ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து, மனிதம் கிஞ்சித்தும் இல்லாத பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிக்க பல தேச எல்லைகளைக் கடந்து, பாதுகாப்பற்ற கடல் பயணங்களைக் கடந்து, தங்களை ஏற்றுக் கொள்ளும், அரவணைக்க காத்திருக்கும் தேசங்களைத் தேடி அலைபவர்கள் அவர்கள்.
அண்மையில் பி.பி.சி ஊடக மையம், கிரீஸ் முகாம்களிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் உள்ள பல்வேறு அகதிகளை சந்தித்து உரையாடி, அவர்களின் தேவையை அறிந்து, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அவர்கள் சந்தித்த அனைத்து ஏதிலிகளும் தங்களின் தேவையாக சொல்லி இருப்பது, ‘தகவல்’ களை மட்டும்தான்.
ஏன் அவர்களுக்கு தகவல்கள் தேவைப்படுகின்றன...?:

உள்நாட்டுப் போர், பயங்கரவாத ஐ.எஸ். ஐ. எஸ்... சிரியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை நிர்மூலமாக்கிவிட்டது. அனைத்து உடைமைகளையும் இழந்த மக்கள், தங்கள் உயிரை, பிள்ளைகளின் உயிரை மட்டுமாவது காத்துக்கொள்ள, தங்களின் வேர்களை தாங்களேப் பிடுங்கி, பாதுகாப்பான தேசங்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்களின் ஒற்றை தேர்வாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே.
சிரியா, ஈராக், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து புறப்படுபவர்கள் தரை மார்க்கமாக துருக்கி சென்று, அங்குள்ள இஷ்மீர் கடற்கரை நகரம் வழியாக, கப்பல்களில் புறப்பட்டு கிரீஸ் சென்றடைந்து, அங்கிருந்து மீண்டும் தரை மார்க்கமாக ஐரோப்பா செல்கிறார்கள்.
உயிர் பிழைத்தால்போதும். மீண்டும் தங்கள் வாழ்வை அங்கு கட்டமைத்துக் கொள்ளலாம் என்பதுதான் அவர்கள் நம்பிக்கை. ஆனால், அவர்களுக்கு இந்தப் பாதையும் பயணமும், சர்வதேச சட்டங்களும் எப்போதும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. இந்தச் சூழலில் அவர்களுக்கு தேவைப்படுவது தகவல்கள் மட்டும்தான்.
எது மாதிரியான தகவல்கள் தேவை...?

குண்டுகளிலிருந்து தப்பித்துச் செல்லும் இம்மக்களை, 'எந்த நாடு ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது... எந்த நாட்டின் எல்லைக் கதவுகள் திறந்து இருக்கின்றன, ஒரு வேளை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டால், நம்மை என்ன செய்வார்கள்' என இவர்களுக்கு எந்த தகவல்களும் தெரிவது இல்லை. அதனால், பல லட்சம் மக்கள் பல துயரங்களை சந்தித்து வருகிறார்கள்.
முன்பு அகதிகள், மேற்கு பால்கன் வழியை பயன்படுத்தி, ஐரோப்பியாவிற்குள் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால், மார்ச் 2016 ம் ஆண்டு இந்த பாதை மூடப்பட்டுவிட்டது. இதனால், கிரீஸில் உள்ள அகதி முகாம்களில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் மட்டும் 46,000 மக்கள்.
இதுபோல், அகதிகள் வருகையை கட்டுப்படுத்த அல்லது நிறுத்த, கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியம், துருக்கியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, கிரீஸ் தீவுக்கு வரும் அகதிகள் மீண்டும் துருக்கிக்கே அழைத்து செல்லப்படுவார்கள். அங்கிருந்து மீண்டும் அவரவர் நாட்டிற்கு திருப்பி அனுப்படுவார்கள். ஆனால், இது போன்ற தகவல்கள் தெரியாமல் அதிக எண்ணிக்கையிலான அகதிகள், நாளையும் வாழலாம் என்ற பேராசையுடன் (மன்னிக்கவும். ஒரு அகதி அப்படிதான் கூறுகிறார். 'அடுத்த நிமிடமே நிச்சயமற்றதாக இருக்கும் போது, நாளை உயிரோடு இருப்போம் என்று எதிர்பார்ப்பது பேராசைதானே...!' என்கிறார்) தினம் தினம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கிரீஸ் ரிட்சோனா அகதிகள் முகாமில் இருக்கும் ஒரு யஷிதி அகதி, “எங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. எப்போது எல்லை கதவுகள் திறக்குமென்று தெரியாது. நான் இங்கிருந்து செல்ல விரும்புகிறேன்...” என்கிறார்.
அது போல இன்னொரு சிரிய அகதி, “போர், பயங்கரவாதம், தீவிரவாதம் என எப்போதும் செத்துவிடக் கூடிய சூழல் இருந்தாலும், எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இப்போது அனைத்தும் தகர்ந்து விட்டது.
போர் சூழலை விட அகதி வாழ்வு கொடுமையாக இருக்கிறது” என்கிறார்.

“பாதுகாப்பான நாடுகளுக்கு எங்களை அழைத்து செல்வதாக, எங்களிடமிருந்து பணம் பெறுபவர்கள், எங்களுக்கு எந்தவித உண்மையான தகவலையும் சொல்வது இல்லை. எங்களை ஏமாற்றுகிறார்கள். அகதிகள் முகாமிலும் எங்களுக்கு ஏகப்பட்ட துயரங்கள். அந்த நாட்டு அதிகாரிகளின் மொழி புரிவது இல்லை. அகதிகளுக்காக எந்த உரிமைகள் இருக்கின்றன. எங்களை எந்த நாடு அரவணைத்துக் கொள்ள தயராக இருக்கிறது என்று எதுவும் தெரிவதில்லை. பெரும்பாலும் நாங்கள் சமூக ஊடகங்களிலிருந்தே தகவல்களைப் பெறுகிறோம். ஆனால், அதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள்.” என்கிறார்கள் கிரீஸில் இருக்கும் அகதிகள்.
மேலும் அவர்கள், “எங்களுக்கு எதுவும் நீங்கள் அளிக்க வேண்டாம். உண்மையான தகவல்களை அளியுங்கள், கிரீஸில் அகதிகள் முகாமில் இருக்கும் எங்களின் உரிமை என்ன... நிலை என்ன... எப்போது எல்லைக் கதவுகள் திறக்கும் என்ற தகவல்களை மட்டும் அளியுங்கள்..” என்கிறார்கள்.
'எங்களுக்கு நீங்கள் உணவளிக்காவிட்டாலும் பரவாயில்லை, தகவல்களை மட்டும் அளியுங்கள்' என்பது மட்டும்தான் இவர்களது ஒரே கோரிக்கை.
மூன்று நிமிடப் படம்:

பி.பி.சி இந்த ஆய்வு முடிவுகளைக் கொண்டு, மூன்று நிமிடப் படத்தை எடுத்து இருக்கிறது.
தங்கள் தேச அடையாளங்களை துறந்து, அகதி என்னும் புது அடையாளத்தை தழுவிக் கொள்ள இருப்பவர்கள், தங்களுடன் எடுத்துச் செல்வது ஒரு கைபேசியை மட்டும்தான்.
அப்படி கைபேசியுடன் செல்லும் ஒரு அகதி கூட்டத்தின் கதைதான் அந்த அனிமேஷன் படம்.
கையில் கைபேசியுடன், கடலில் ஒரு அகதி கூட்டம் பயணம் செய்து கொண்டிருக்கிறது. பெரும் மழை.இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நிலப்பரப்பில் இருக்கும் தந்தையுடன், ஒருவன் கைபேசியில் உரையாடி சில தகவல்களை பெறுகிறான். அப்போது அவனுடைய கைபேசிக்கு ஒரு தகவல் வருகிறது. 'திரும்ப வந்துவிடு, எல்லை வாயில் மூடப்பட்டுவிட்டது' என்கிறது தகவல்கள். 'இது உண்மையா... நிச்சயமாகவா... உங்களுக்கு எப்படி தெரியும்...? ' என்று கேட்கும்போது கைபேசியில் பேட்டரி சார்ஜ் குறைகிறது.
மூன்று நிமிடம் உங்கள் தேசங்களை மறந்து, சவுகரியங்களை மறந்து, கடலில் தத்தளிப்பவராக உங்களை நினைத்துக் கொண்டு அந்த படத்தைப் பாருங்கள்.
உண்மையில் அவர்களுக்கு தகவல்கள் விலைமதிப்பற்றவை என்று புரியும்...!

No comments:
Post a Comment