Monetize Your Website or Blog

Friday, 29 July 2016

ராகிங் செய்தால்....சாட்டை எடுக்கும் உயர்கல்வித்துறை!

ல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவர்களிடம் ராகிங்கில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எழுதி வாங்க வேண்டும், என்று உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சலிங் முடிந்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதுபோல் கலைக்கல்லூரிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக சேரும் மாணவர்களை ராகிங் செய்வது, அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆங்காங்கே நடந்து வருகிறது. ராக்கிங் கொடுமையில் இருந்து மாணவர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழக காவல்துறை கடந்த சில வருடங்களுக்கு முன் ராகிங் தொடர்பான புகார்களை தெரிவிக்க தனி தொலைபெசி எண்களை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த 2016- 17ம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.  இந்நிலையில் கல்லூரிகளில் நடக்கும் ராகிங்கை தடுப்பது தொடர்பாக உயர்கல்வித்துறை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
* ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி நிர்வாகத்தினரை அழைத்து ராகிங்கை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும்.
* கல்லூரிகளில் புதிய மாணவர்களை சேர்க்கும் போது ராகிங்கில் ஈடுபட மாட்டேன், என்று மாணவர்களிடம் உறுதிமொழி எழுதிப் பெற வேண்டும். மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களிடமும் உறுதிமொழி படிவம் எழுதி வாங்க வேண்டும்.


* முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய ராகிங் தடுப்பு கண்காணிப்புக் குழுவை ஒவ்வொரு கல்லூரியிலும் அமைக்க வேண்டும். அதில் டி.எஸ்.பி., மற்றும் தாசில்தார் இடம் பெற்றிருப்பர். ராகிங் கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருப்பவர்களின் செல்போன் நம்பர்களை கல்லூரி தகவல் பலகையில் பெரிதாக எழுதி வைக்க வேண்டும்.
* ராகிங் தொடர்பான புகார்கள் மற்றும் அதன் மீது எடுத்த நடவடிக்கை குறித்து கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாவட்ட நிர்வாகத்திற்கு தனியாக அறிக்கை தர வேண்டும்.
* மாணவர்கள் ராகிங் பற்றிய புகார்களை தெரிவிப்பதற்கு வசதியாக ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் தனி இணையதளம் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் அளிக்கும் வகையில் மாணவர்களுக்கு தனி வசதிகள் செய்து தர வேண்டும்.

* ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழிப்பு உணர்வு வாசகங்களை கல்லூரி வளாகத்திற்குள் நிர்வாகத்தினர் எழுதி வைக்க  வேண்டும்.
* முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்லூரியின் அடையாள அட்டையின் பின்புறத்தில் ராகிங் தொடர்பான புகார்களை பதிவு செய்வதற்கான, ‘‘ஆன்ட்டி ராகிங் என்ற மத்திய அரசின் இணைய தள முகவரியையும், இலவச டோல் போன் நம்பரான, '1800 180 55 22' என்ற நம்பரை, அச்சிட்டு வழங்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ராகிங் தடுப்பது தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.


No comments:

Post a Comment