ஊதிய உயர்வு வழங்கக்கோரி, கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால், கர்நாடக மாநில பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநில அரசு, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அதன்படி, போக்குவரத்து ஊழியர்களுக்கு தற்போது 8 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும், 35 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, 25-ம் தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்தன.

இந்நிலையில் ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மாநில அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் 8 சதவீத ஊதிய உயர்வை, 10 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடும்படி ஊழியர்கள் சங்கங்களை முதல்வர் சித்தராமையா கேட்டுக் கொண்டார். ஆனால், இதனை ஊழியர் சங்கம் ஏற்க மறுத்ததுடன், திட்டமிட்டப்படி 25-ம் தேதி முதல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று சங்க பிரதிநிதிகள் அறிவித்து இருந்தனர்.
ஆனால், ஒரு நாள் முன்னதாகவே நேற்று முதலே பெங்களூரு உள்பட பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் பெரும்பாலான அரசு பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டதுடன், மடிவாளா, எலெக்ட்ரானிக் சிட்டி, கெங்கேரி, ஒயிட்பீல்டு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் நேற்றே பஸ்கள் ஓடவில்லை. மண்டியா, மைசூரு, பெலகாவி, கதக் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று காலையில் இருந்தே பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் கர்நாடகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தினால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க, கர்நாடக மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து உயர் அதிகாரிகளுடன், மாநில போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் கூறும்போது, ''போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை வழங்க முடியாத நிலை உள்ளது. அதனால், பொதுமக்கள் வசதிக்காக மாநிலத்தில் உள்ள 86 ஆயிரம் தனியார் வாகனங்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது" என்றார்.

No comments:
Post a Comment