கிரிக்கெட் அரங்கில் இப்படி ஒரு ஃபீல்டர் இருந்ததுமில்லை... இனியும் வரப் போவதுமில்லை. எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கியதும் இல்லை. இருக்கும் வரை இருந்த இடம் தெரிந்ததும் இல்லை. அப்படி ஒரு கிரிக்கெட் வீரர் உண்டாவென்றால் சத்தமில்லாமல் ஜான்டியை நோக்கி கை காட்டலாம். ஏபிடிக்கு முன்னர் இவர்தான் கிரிக்கெட் உலகின் 'ஏலியன்'. இன்று அவருக்கு 47 வது பிறந்தநாள். இந்த தருணத்தில் அவரைப் பற்றிய சில அரிய தகவல்கள்.

ஜான்டி ரோட்ஸ் தென் ஆப்ரிக்க அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகளிலும் 245 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். எல்லா ஃபார்மட்டிலும் சரசாரி 35 க்கு மேல்.
டெஸ்ட் போட்டியில் 2,532 ரன்களை அடித்துள்ளார்.இதில் 3 சதங்களும் 17 அரை சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டியில் 5,935 ரன்கள் சேர்த்துள்ளார். 33 அரை சதங்களும் 2 சதங்களும் ஜான்டியின் கணக்கில் உண்டு.
1992ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக்கை, ஜான்டி ரன்அவுட் செய்தவிதம் கிரிக்கெட் உலகையே பிரமிக்க வைத்தது. ஜான்டியின் ஜிம்னாஸ்டிக் ரக கேட்ச்சுகளை காண கோடி கண்கள் வேண்டும்.
ஜான்டி விளையாடிய கால கட்டத்தில் தென் ஆப்ரிக்காவிலேயே விளம்பரம் மூலம் அதிகம் சம்பாதித்த கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான்டி கிரிக்கெட் மட்டுமல்ல ஹாக்கியிலும் அசத்துபவர். 1996ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த தென் ஆப்ரிக்க ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவரால் ஒலிம்பிக்கில் அவரால் பங்கேற்க முடியாமல் போய் விட்டது.
1999 ம் ஆண்டு விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2003ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஜான்டிக்கு விரல்களில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும் கவுண்டி கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடினார். அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற பின், ஜான்டி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் அக்கவுண்ட் எக்ஸிகியூடிவ் பணியில் சேர்ந்தார்.
இப்பாதும் தென்ஆப்ரிக்க அணிக்கு ஃபீல்டிங் பயிற்சி அளிப்பதுண்டு. ஐபிஎல் தொடரில் விளையாடும் மும்பை அணியினருக்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக இருக்கிறார்.
இப்பாதும் தென்ஆப்ரிக்க அணிக்கு ஃபீல்டிங் பயிற்சி அளிப்பதுண்டு. ஐபிஎல் தொடரில் விளையாடும் மும்பை அணியினருக்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக இருக்கிறார்.

ஜான்டி ரோட்ஸின் மனைவி கடந்த ஆண்டு மும்பையில் பெண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தை நம் நாட்டில் பிறந்ததால், அந்த குழந்தைக்கு 'இந்தியா ' என ஜான்டி பெயர் சூட்டினார்.

No comments:
Post a Comment