வழக்கறிஞர்கள் சட்டத்தில் செய்யப்பட்ட புதிய திருத்தங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இன்று அறிவித்துள்ளார்.இதன்மூலம் கடந்த சில நாட்களாக நீதித்துறையை அசைத்துப்பார்த்த வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சட்டத் திருத்தத்தில் உள்ள ஆட்சேபகரமான அம்சங்கள் குறித்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அவர்களின் கருத்துகள் கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம், வழக்கறிஞர்கள் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதன்படி, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது, நீதிபதிகளின் பெயரைச் சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வாங்குவது, நீதிபதியை மிரட்டும் விதமாக உரத்தக் குரலில் வாதம் செய்வது, நீதிபதிகள் குறித்து அவதூறு பரப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களை, குற்றச் சாட்டின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்யவும், குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள கோர்ட்டுகளில் ஆஜராக தடைவிதிக்கவும் ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சட்டத் திருத்தத்துக்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் இருக்கும் போது, அந்த அதிகாரத்தை பறிக்கும் விதமாக உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டத் திருத்தத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று ஜூன் 1 முதல் பல்வேறு மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் போராட்டக்குழு தலைவர் திருமலைராஜன் உள்பட 126 பேரை, நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்து பார் கவுன்சில் உத்தரவிட்டது.

மிகவும் இக்கட்டான இந்த சூழ்நிலையில்தான், நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள், போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தினால் போக்குவரத்தும், நீதிமன்ற பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன.
உயர் நீதிமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் 29 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதேபோல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, பொது அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தும், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் கருணாகரன் மற்றும் வழக்கறிஞர்கள் அசோக்குமார், யாசர் அராபத், கிஷோர், ஓம்பிரகாஷ் ஆகிய 5 பேர் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர்கள் மத்தியில் இந்த கைது சம்பவம், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எஞ்சியுள்ள 24 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே புருஷோத்தமன் என்ற வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு, இன்று தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான புருசோத்தமன், "தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் செயல்படாமல் உள்ளது. வழக்கறிஞர் போராட்டம் நீடிப்பதால் மோசமான நிலை நிலவுகிறது. எனவே, புதிய சட்டவிதிகளை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும்." என்று குறிப்பிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், "புதிய விதிகளை ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைத்திருக்கிறோம். அந்த கமிட்டியிடம் வழக்கறிஞர்கள் தங்கள் குறைகளை கூறலாம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரலாம் என கூறியிருக்கிறேன். அதன் பின்பும், வழக்கறிஞர்கள் போராடுவது வேதனை அளிக்கிறது." என்று கூறி விட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு தள்ளிவைத்ததோடு, புதிய சட்டத் திருத்தங்கள் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
வழக்கறிஞர் முத்து அமுதநாதன், போராட்ட நடவடிக்கை குறித்து கூறும்போது, "நாளைய தினம் கழித்துதான் ஒரு முடிவைச் சொல்ல முடியும். கூட்டு நடவடிக்கைக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடக்க உள்ளது. அதில் அனைவரும் கலந்து பேசித்தான் உரிய முடிவெடுக்க உள்ளோம். போராட்டத்தைத் தொடர்வதா, அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதா என்ற கேள்விகளுக்கு அப்போதுதான் விடை காண முடியும்" என்றார்.
புதிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறாதவரையில் தங்களது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்கின்றன வழக்கறிஞர் சங்கங்கள். அதுவரையில் இந்த விஷயம், நீறுப்பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கும் என்பதுதான் தற்போதைய நிலை

No comments:
Post a Comment