Monetize Your Website or Blog

Tuesday, 26 July 2016

என்னை துரோகியாக சித்தரிக்க வேண்டாம்! - இலங்கைக்கு முரளீதரன் பதிலடி

ஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிப்பதால் என்னை துரோகியாக சித்தரிக்க வேண்டாம் என முத்தையா முரளீதரன் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரன் பந்துவீச்சு ஆலோசகராக உள்ளார். கண்டியில்  உள்ள பெலேகலே மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. முன்னதாக நேற்று  ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன்  பெலேகலே மைதானத்தில் முரளீதரன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.  

அப்போது மைதான பராமரிப்பாளர் ஒருவருக்கும் முரளீதரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்கு வாதம் முற்றி முரளீதரன் பராமரிப்பாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் இலங்கை அணியின் மேலாளர் சேனநாயகாவையும் காட்டமாக விமர்சித்துள்ளார் என்றும் செய்திகள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு முரளீதரனின் நடவடிக்கை குறித்து புகார் அளித்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபாலா கூறுகையில், '' ''ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் விதிமுறைகளை மீறி மைதானத்தின் ஆடுகளத்தை பயன்படுத்தியுள்ளனர். தொழில்முறையாக ஆஸ்திரேலிய அணியினருக்கு முரளீதரன் பயிற்சி அளிப்பது குறித்து எந்த பிரச்னையும் இல்லை. ஆனால்  இப்படி நடந்து கொள்வது நல்ல கிரிக்கெட் வீரருக்கு அழகல்ல. தனது நன்மதிப்பைத் தானே குறைத்துக் கொள்ளும் வகையில் முரளீதரன் நடந்து கொள்கிறார்''  என குற்றஞ்சாட்டியுள்ளார். 



இதற்கிடையே  ''ஆஸ்திரேலிய அணியினருக்கு பயிற்சி அளிப்பதால் என்னை துரோகி போல நடத்த வேண்டாம். இலங்கை அணி நிர்வாகம் எனது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டது. எனது மதிப்பைப் புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் சுமதிபாலாவுக்கு கிரிக்கெட்டை பற்றி  ஒன்றும் தெரியாது. இது ஒரு அரசியல் விளையாட்டு''  என முரளீதரன் பதிலடி கொடுத்துள்ளார்.
முரளீதரன் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் புகார் அளித்ததாகவும் பிரச்னை சமதானமாக முடித்து வைக்கப்பட்டதாகவும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.




No comments:

Post a Comment