Monetize Your Website or Blog

Friday, 22 July 2016

இணையத்தில் வெளியாகியது கபாலி...


ண்டிகை கால தட்கல் டிக்கெட்டுகளை போல் மின்னல் வேகத்தில் சாதனை படைத்தது கபாலி திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை. நேற்று இரவு பலரது எதிர்பார்ப்பு, கபாலி படத்தின் ஒரு டிக்கெட்டாகத்தான் இருந்தது. ஒரு டிக்கெட் விலை 2,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டது.

பல திரையரங்குகளில், கபாலி படத்தின் முதல் காட்சி தற்போது தான் தொடங்கி இருக்கும். நேற்று இரவே, வெளிநாடுகளில் படம் வெளியாகிவிட்டதால், படத்தைப் பற்றிய விமர்சனங்கள் இணையத்தில் வரத்தொடங்கிவிட்டன.



கபாலி படத்தை ஆன்லைனில் வெளியிடக்கூடாதென படத்தின் தயாரிப்பாளர் தாணு, நீதிமன்றத்தை அணுகி இருந்தார். அதன்படி, பல இணையதளங்கள் முடக்கப்பட்டன. இரண்டு தினங்களுக்கு முன், ரஜினிகாந்த் கலந்து கொண்ட கபாலி திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அப்போதே, படத்தின் முதல் இரண்டு நிமிட காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போது 110 நிமிடங்கள் ஓடக்கூடிய கபாலி திரைப்படத்தின் தியேட்டர் பிரின்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு பாதுகாப்பு, நீதிமன்ற தடை உத்தரவு அனைத்தையும் மீறி இணையத்தில் படம் வெளியாகி இருப்பது, ரஜினி ரசிகர்களிடையே  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.




No comments:

Post a Comment