அமெரிக்காவில் பிளெயின் நகரில் மினிசோட்டா யுனைடெட் அணியுடன் போர்னேமவுத் அணி மோதியது. இந்த போட்டியில் எதிர்பாராதவிதமாக மினிசோட்டா அணியின் கோல்கீப்பரே சேம்சைடு கோல் அடித்தார்.
மினிசோட்டா அணியின் கோல்கீப்பர் சமி, கோலி ஏரியாவுக்குள் கிடைத்த பந்தை தனது அணி வீரர்களிடம் எறிவதற்காக முயற்சித்தார். ஆனால் கையில் இருந்து நழுவிய பந்து எதிர்பாராமல் கோல் கம்பத்தை நோக்கி சென்றது. அதனைத் தடுக்க சமியும் முயற்சித்தார். ஆனால் பலன் கிடைக்கவில்லை. பந்து கோல் லைனை தாண்டிவிட்டது. கால்பந்தாட்ட உலகிலேயே மிக மோசமான சேம்சைடு கோலாக இது கருதப்படுகிறது.

No comments:
Post a Comment