உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான். ' தமிழர் அல்லாதவர்கள் குறித்துப் பேசும்போது எச்சரிக்கையாக இருங்கள். பெரியார் குறித்தும் மாற்று மொழி பேசுபவர்கள் குறித்தும் அனுமதியில்லாமல் யாரும் பேச வேண்டாம்' என எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 1 சதவீத வாக்குகளை வாங்கியது நாம் தமிழர் கட்சி. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கடலூரில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். இதன்பிறகு, கடந்த அறுபது நாட்களாக அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே யாருக்கும் தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னையையொட்டி நாளை மறுநாள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீமான் களமிறங்கியதை வரவேற்கிறார்கள் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள்.
' இவ்வளவு நாள் எங்கே போய்விட்டார்?' என்ற கேள்வியை முன்வைத்தோம் நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம்.

" தினமும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தால், கட்சி என்ற ஒன்று இருப்பதைப் பற்றி மக்கள் அறிவார்கள். ஊடகங்களைக் கையாள்வதில் மிகப் பெரிய தேக்கநிலை இருக்கிறது. இதைப் பற்றி அண்ணனிடம் வலியுறுத்தினோம். ' செய்வோம் தம்பி' என்ற வார்த்தையோடு முடித்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு தி.நகரில் கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய சீமான், ' இனி கட்சி தொடர்பாக பேசுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுவரையில் நான் எந்த இடத்திலாவது வந்தேறி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறேனா? நான் அவ்வாறு பேசியதாக யாராவது நிரூபிக்க முடியுமா? இப்படித்தான் கட்சியின் சார்பில் சிலர் பேசும் வார்த்கைளை, நான் பேசுவதாக பொதுவெளியில் பரப்புகிறார்கள்.
பெரியாரைப் பற்றி அவதூறாக நான் எந்த இடத்திலும் பேசியதில்லை. இனி வரும் காலங்களில் தமிழர் அல்லாதவர்கள், பெரியார் குறித்தெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பாளர்கள்தான் பேச வேண்டும். மைக் கிடைக்கிறவர்கள் எல்லாம் பேசக் கூடாது. அதேபோல், பிறமொழி பேசுபவர்களின் உரிமையில் தலையிட வேண்டாம். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். கட்சியில் உள்ள சிலர் இணையதளத்தின் மூலமாக பரப்பும் செய்திகள், நமக்குத்தான் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன. நாம் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஒரு சதவீத வாக்குகளை வாங்கியிருக்கிறோம். பெரிய அளவில் நாம் வெற்றி பெறாததற்குக் காரணமே சாதி, மதம் மற்றும் பணரீதியாக தமிழன் பிரிந்துகிடப்பதுதான். உள்ளாட்சித் தேர்தலை வலுவாக சந்திப்போம்' எனப் பேசினார்.
தொடர்ந்து கிராம அளவில் இருந்து கட்சியை வலுப்பெற வைப்பது பற்றி விரிவான விவாதம் நடந்தது. அதிலும், கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பையே கலைத்துவிட்டு, மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் புதிய முறையை அமல்படுத்துவது பற்றி பேச்சு எழுந்தது. கிராம, நகர பொறுப்பாளர்களைத் தேர்வு செய்து, அவர்கள் மூலம் மாவட்ட செயலாளர்களைத் தேர்வு செய்வதே சிறந்தது என்பதை அவரிடம் வலியுறுத்தினோம். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். வரும் காலங்களில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறார் சீமான்" என்றார் விரிவாக.
' பெரியார், தமிழர் அல்லாதவர்கள் போன்ற விவகாரங்களை அணுகுவதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறார் சீமான்' என்கின்றனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள்.

No comments:
Post a Comment