Monetize Your Website or Blog

Friday, 29 July 2016

மது போதையில் பணிக்கு வரும் விமானிகள்... பதறச் செய்யும் புள்ளிவிவரம்!

ரு பக்கம் விமானங்கள் மாயமாவது, கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுவது என பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஆல்கஹால் அருந்திவிட்டு விமானத்தை ஓட்டும் முன்பே பிடிபட்ட விமானிகளை பற்றி தெரியவந்துள்ள விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் உள்ள விமானிகளிடம், விமானம் ஓட்டச் செல்லும் முன் செய்யப்படும் மருத்துவ பரிசோதனையில், கடந்த மூன்று வருடங்களில் 122 விமானிகள் குடித்துவிட்டு வந்தது தெரியவந்ததாக  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலையங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், மும்பை விமான நிலையத்தில்தான் அதிகபட்சமாக 34  விமானிகள் பிடிபட்டுள்ளனர்.  அதன்பின் டெல்லியில் 31 பேரும், கொல்கத்தாவில் 18 பேரும், சென்னையில் 10 பேரும், பெங்களூரில் 9 பேரும் பிடிபட்டுள்ளனர். பட்டியலிடப்பட்டுள்ள 16 விமான நிலையங்களில் மொத்தம் 122 பேர் சிக்கியுள்ளனர். 
 
2016 ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 23 விமானிகள் குடித்துவிட்டு பணிக்கு வந்துள்ளனர். இது  2015, 2014, 2013 ஆகிய ஆண்டுகளில் முறையே 43,30,26 என்ற அளவில் இருந்துள்ளது. 

இதில் விமான நிறுவனங்கள் வாரியாக பட்டியலிட்டால் ஜெட் ஏர்வேஸ் 33, இன்டிகோ 25, ஸ்பைஸ்ஜெட் 20 மற்றும் ஏர் இந்தியா 19 என்ற‌ எண்ணிக்கையில் விமானிகள் குடித்துவிட்டு பணிக்கு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment