மதுரையில் குற்ற வழக்கில் தொடர்புடையதாக கூறி 3 வயது குழந்தையை ரிமாண்ட் செய்து சிறைக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட்டின் செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை விளாச்சேரி மொட்டைமலையை சேர்ந்த மாரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சமீபத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கடந்த 21ம் தேதி களிமண் சிலைகளை செய்து விற்க செல்லும்போது, என் கணவர் முருகன், என்னுடைய சகோதரி மாரியம்மாள், அவருடைய கணவர் குருவன், ஆகியோரை மார்த்தாண்டம் காவல்துறையினர் விசாரணைக்காக என்னை தவிர்த்து, என் மூன்று வயது குழந்தை விஜய் உட்பட நான்கு பேரையும் ஜீப்பில் ஏற்றிச் சென்றார்கள். சட்டவிரோதமாக அடைபட்டிருக்கும் என் குழந்தையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இதுபற்றி நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது அரசு வழக்கறிஞர், " ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக மூன்று பேரையும் மார்த்தாண்டம் காவல்துறை கைது செய்து, குழித்துறை மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்துள்ளனர். குழந்தை ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சித்தியுடன் சிறையில் உள்ளான் " என்று தெரிவிக்க, நீதிமன்றமே அதிர்ந்து விட்டது.
குற்றம் செய்த சிறுவர்களையே சிறைக்கு அனுப்பாமல் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் காலத்தில், விவரம் அறியா மூன்று வயது குழந்தையை சிறைக்கு அனுப்ப, அதிலும் தாயிடமிருந்து பிரித்து சிறைக்கு அனுப்ப காவல்துறைக்கு யார் அனுமதி அளித்தது, மாஜிஸ்திரேட் குழந்தைக்கு எதிராக எந்த அடிப்படையில் ரிமாண்ட் செய்தார் என்று கடுமையாக பேசிய நீதிபதி, குழந்தையை உடனே தாயிடம் சேர்க்க வேண்டும். சட்டத்தை மீறி குழந்தையை சிறைக்குள் அனுப்பிய குழித்துறை மாஜிஸ்திரேட், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என்று என்று மூன்று நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாஜிஸ்திரேட்டும் இன்ஸ்பெக்டரும் ஆஜராகினார்கள்.

குழந்தையும் சிறையிலிருந்து கொண்டு வரப்பட்டு மாலையில் தாய் மாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. 'குழந்தையை சிறைக்குள் அனுப்ப என்ன காரணம் என்பதை எழுத்து மூலமான அறிக்கையாக தனக்கு சமர்ப்பிக்க வேண்டும்' என்று கூறிய நீதிபதி, மாஜிஸ்திரேட்டிடமும், இன்ஸ்பெக்டர் மீதும், டிபார்ட்மெண்ட் ஆக்ஷன் எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
நீதித்துறை மற்றும் காவல்துறையினரின் இந்த மனிதாபிமானமற்ற சட்டவிரோத செயல், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:
Post a Comment