பூமிப் பந்தில், புதிய கண்டுபிடிப்புகள்தான் மனித குலத்தை மாற்றி புதிய விடியலை காட்டின. காணும் கனவுகள் மெய்ப்படும்போது வானமும் தொட்டுவிடும் தூரம்தான் என்பதற்கு எடுத்துக்காட்டு, சூரிய ஒளி விமானம்.
இதுநாள் வரை சூரிய சக்தி மூலம் இயங்கும் விமானத்தில் உலகைச் சுற்றி வருவது, ஒரு எட்டாக் கனியாகவே இருந்தது. ஆனால், அதனை முறியடித்து இருக்கிறார்கள் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் பிச்சர்ட் மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்சபெர்க். அவர்கள் கண்டறிந்துள்ள சோலார் இம்பல்ஸ் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

அபுதாபியில் இருந்து தனது பயணத்தைச் சென்ற ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி தொடங்கிய சோலார் இம்பல்ஸ் இந்தியா, மியான்மார், சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா வழியாக உலகம் முழுவதையும் சுற்றி, மொத்தம் 43,041 கி.மீ தூரத்தை 558 மணி நேரம் பயணம் செய்து மீண்டும் அபுதாபியை கடந்த 26-ம் தேதி வந்தடைந்திருக்கிறது.
இந்தச் சாதனைக்குரிய விமானப் பயணத்தில், சோலார் இம்பல்ஸ் 8 உலக சாதனைகளைப் படைத்துள்ளது. ஆனால், அவற்றில் குறிப்பிடத்தக்க சாதனை என்னவென்றால் ஜப்பானில் இருந்து ஹவாய் வரை 7,900 கி.மீ. தூரத்தை இடைவிடாமல் தொடர்ந்து 5 பகல்கள் 5 இரவுகள் வானில் பசிபிக் பெருங்கடல் மேலே பறந்த முதல் சோலார் விமானம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

அந்தப் பயணத்தின்போது, விமானத்தை இயற்றியவர் ஆண்ட்ரே போர்ஸ்சபெர்க். இந்தப் பயண தூரத்தின் மொத்த நேரம் 117 மணி 52 நிமிடங்கள். சோலார் இம்பல்சின் சராசரி வேகம் 75 கி.மீ. இது அதிகபட்சமாக எட்டிய உயரம் 28,000 அடி. இதன் அதிகபட்ச வேகம் 216 கி.மீ. சோலார் இம்பல்சின் மொத்த எடை 2.3 டன்கள். இந்த சோலார் விமானத்தில், 17.248 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த சாதனை குறித்துப் பேசிய குழுவினர், ''சோலார் இம்பல்ஸ், முதல் சோலார் விமானம் அல்ல. ஆனால் இரவு, பகலாக பறந்த முதல் சோலார் விமானம்" என்று பெருமையுடன் தெரிவிக்கின்றனர். இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த விமானத்தில் ஒரு சொட்டு எரிபொருளைக்கூட பயன்படுத்தவில்லை என்பதுதான்.
தற்போதைக்கு விமான எரிபொருள் விலை சற்றுக் குறைவு என்றாலும், வருங்காலத்தில் அது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடும். இதற்கு மாற்றுதான் சூரிய ஒளி விமானம்.சூரிய ஒளி விமானம் மூலம் சாமான்யனுக்கு விமானப்பயணம் கைக்கு எட்டும் தூரத்தில் விரைவில் வந்துவிடும்.
இந்த விமானத்தில் இப்போதைக்கு ஒரே ஒரு விமானிக்குத்தான் இடம் உள்ளது. இரு விமானிகள் இருக்கையுடன் விரிவுபடுத்தப்பட்டு இது பயணிகள் விமானமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அந்த நன்னாளை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

No comments:
Post a Comment