புள்ளிராஜா விளம்பரமோ தில்லுதுரை பிளக்ஸ் போர்டுகளோ இல்லாமல் சுகாதாரத் துறை அலுவலகங்கள் சோர்ந்து போயுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக எய்ட்ஸ் தடுப்பு பிரசாரங்களைக் காண முடியவில்லை. ' சுகாதாரத்திற்கான நிதியில் முப்பது சதவீதத்தை மத்திய அரசு குறைத்துவிட்டது. மாநில அரசின் நிதியில் திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை' என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த பிரசாரங்களைத் தீவிரமாக முன்னெடுத்தது எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம். மாநில சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் இந்த வாரியம் முன்னெடுத்த பிரசார யுக்திகள், பாமர மக்களை எளிதில் சென்றடைந்தன. 'புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?, தில்லுதுரை' என விதம்விதமான பிரசாரங்களைப் புகுத்தினர். இதன் மூலம் எய்ட்ஸ் நோயின் அபாயத்தையும், பாதுகாப்புச் சாதனங்களை அணிய வேண்டிய கட்டாயத்தையும் மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். இதன் விளைவாக எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தமிழகம் இறங்கியது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இயங்குவதாகவே தெரியவில்லை. பெயரளவில் அதிகாரிகள் வந்து போகின்றனர். 'நிதி இருந்தால்தானே ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியும்' என்கின்றனர் அதிகாரிகள்.
தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த பிரசாரங்களைத் தீவிரமாக முன்னெடுத்தது எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம். மாநில சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் இந்த வாரியம் முன்னெடுத்த பிரசார யுக்திகள், பாமர மக்களை எளிதில் சென்றடைந்தன. 'புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?, தில்லுதுரை' என விதம்விதமான பிரசாரங்களைப் புகுத்தினர். இதன் மூலம் எய்ட்ஸ் நோயின் அபாயத்தையும், பாதுகாப்புச் சாதனங்களை அணிய வேண்டிய கட்டாயத்தையும் மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். இதன் விளைவாக எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு தமிழகம் இறங்கியது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இயங்குவதாகவே தெரியவில்லை. பெயரளவில் அதிகாரிகள் வந்து போகின்றனர். 'நிதி இருந்தால்தானே ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியும்' என்கின்றனர் அதிகாரிகள்.
அவர்கள் நம்மிடம், " தமிழ்நாட்டில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள் வசிக்கின்றனர். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் எட்டாயிரத்தைத் தாண்டிவிட்டது. எங்கள் வாரியத்தின் மூலம் எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகளுக்கு என தனியாக அறக்கட்டளையை உருவாக்கினோம். தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை போதிய அளவில் வழங்க முடியவில்லை. ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் மருந்து பற்றாக்குறை நிலவி வருகிறது. நோயாளிகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை" என ஆதங்கப்பட்டனர்.
" மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு பதவிக்கு வந்த நாளில் இருந்து சுகாதாரத்திற்கான நிதியில் கை வைக்க ஆரம்பித்துவிட்டது. சுகாதாரம், நோய் தடுப்பு போன்றவற்றைச் செயல்படுத்துவதில் 30 சதவீதத்தை மத்திய அரசு முடக்கிவிட்டது. இதன்மூலம் ஆறாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தினார்கள். எய்ட்ஸ் நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கான நிதியில் இருந்து தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய 1,300 கோடி ரூபாயை மத்திய அரசு அளிக்கவில்லை. இதன்மூலம் நோய் பரவுதல் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது" என வேதனைப்பட்ட சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், தொடர்ந்து, " சுகாதாரத்திற்காக அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியா பின்தங்கியுள்ளது. நமது பக்கத்து நாடுகளான சீனாவிலும் இலங்கையிலும் சுகாதாரத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுகின்றன. ஆனால் நம் நாட்டில் இதுவரை அளித்து வந்த நிதியைக் குறைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர் ஏழைகள்தான். அவர்கள் அரசு மருத்துவமனைகளை நம்பிதான் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்நிலையில் பொது சுகாதாரத்தில் கை வைப்பது என்பது, நோய்களின் பெருக்கத்தை தீவிரப்படுத்தவே வாய்ப்பு அதிகம். எனவே, கூடுதல் நிதியை வலியுறுத்திப் பெற வேண்டிய அவசியம் மாநில அரசுக்கு இருக்கிறது. எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரசாரங்களுக்கு மாநில அரசும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்" என்றார் உறுதியாக.
" மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு பதவிக்கு வந்த நாளில் இருந்து சுகாதாரத்திற்கான நிதியில் கை வைக்க ஆரம்பித்துவிட்டது. சுகாதாரம், நோய் தடுப்பு போன்றவற்றைச் செயல்படுத்துவதில் 30 சதவீதத்தை மத்திய அரசு முடக்கிவிட்டது. இதன்மூலம் ஆறாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தினார்கள். எய்ட்ஸ் நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கான நிதியில் இருந்து தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய 1,300 கோடி ரூபாயை மத்திய அரசு அளிக்கவில்லை. இதன்மூலம் நோய் பரவுதல் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது" என வேதனைப்பட்ட சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், தொடர்ந்து, " சுகாதாரத்திற்காக அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியா பின்தங்கியுள்ளது. நமது பக்கத்து நாடுகளான சீனாவிலும் இலங்கையிலும் சுகாதாரத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுகின்றன. ஆனால் நம் நாட்டில் இதுவரை அளித்து வந்த நிதியைக் குறைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர் ஏழைகள்தான். அவர்கள் அரசு மருத்துவமனைகளை நம்பிதான் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்நிலையில் பொது சுகாதாரத்தில் கை வைப்பது என்பது, நோய்களின் பெருக்கத்தை தீவிரப்படுத்தவே வாய்ப்பு அதிகம். எனவே, கூடுதல் நிதியை வலியுறுத்திப் பெற வேண்டிய அவசியம் மாநில அரசுக்கு இருக்கிறது. எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரசாரங்களுக்கு மாநில அரசும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்" என்றார் உறுதியாக. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவியோடு இயங்கி வந்த தன்னார்வக் குழு ஒன்றின் நிர்வாகி நம்மிடம், " வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் அமரும் சமூக அக்கறையுள்ள அதிகாரிகளால் தினம்தோறும் பல கிராமங்களுக்குப் பயணித்து வந்தோம். தில்லுதுரை, புள்ளி ராஜா விளம்பரங்களைத் தாண்டி, 'இளவட்டம் கொடிகட்டும்' என்ற பிரசாரத்தைப் புகுத்தினோம். இதன்மூலம் எய்ட்ஸ் நோய் பாதிப்படைந்த கிராமங்களுக்குச் சென்று, ' நல்லா இருந்து பத்துப் புள்ள பெத்தெடுத்தது அந்தக் காலம், தாறுமாறான துணையைத் தேடி ஹெச்.ஐ.வி வாங்குவது இந்தக் காலம்' எனப் பாட்டு பாடி, மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தினோம். இளவட்டக் கல்லை தூக்குவது, உரியடித்தல், கம்பு சுற்றுதல் என ஆண்களுக்கு ஆரோக்கியத்தை உணர்த்தும் போட்டிகளை நடத்தி பரிசு கொடுப்போம். பாதுகாப்பான உறவு குறித்து நாள் முழுக்க நாடகம் நடத்துவோம். இதற்காக தினமும் நூறு ரூபாய் வரையில் ஊக்கத் தொகை கொடுத்து வந்தனர். இரண்டாண்டுகளாக எங்களைப் போன்ற கலைக் குழுக்களுக்கு எந்த வேலையும் இல்லை. மாநில அரசைத்தான் நம்பியிருக்கிறோம்" என்கின்றனர்.

No comments:
Post a Comment