விழுப்புரம் எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மர்ம மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் ' சீல் வைக்கப்பட்ட எஸ்.வி.எஸ் கல்லூரி இயங்க ஆரம்பித்துவிட்டது. கவுன்சலிங்கில் அந்தக் கல்லூரியின் பெயர் இடம்பெற்றுள்ளது. மாணவிகள் மரணம் தொடர்பான விசாரணையை போலீஸார் வேகப்படுத்த வேண்டும்' என்கின்றனர் மாணவர்கள்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வருகிறது எஸ்.வி.எஸ் சித்த மருத்துவக் கல்லூரி. 'இங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதியில்லை; கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கின்றனர்; எதிர்த்துக் கேட்கும் மாணவர்களுக்கு அடி உதை விழுகிறது' என ஏராளமான குற்றச்சாட்டுகளைக் கூறி, தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர் மாணவர்கள். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகியோர் கல்லூரி எதிரில் இருந்த கிணற்றில் சடலமாக மிதந்தனர். தமிழகத்தையே உலுக்கிய மூன்று மாணவிகளின் மர்ம மரணத்தில், பொதுமக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு. இந்த வழக்கில் கல்லூரி தாளாளர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். எஸ்.வி.எஸ் கல்லூரியில் படித்து வந்த மாணவர்களில் பெரும்பாலானோர், அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 'ஹோமியோபதி உள்ளிட்ட சில பாடப் பிரிவுகளில் பயின்று வந்த ஐம்பது மாணவர்களுக்கு அரசு இடம் கொடுக்கவில்லை' என்று கூறி, அவர்கள் சில நாட்களுக்கு வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த மாணவர்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை.

மூன்று மாணவிகள் மரணம் தொடர்பாக நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர், " தற்போது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார் கல்லூரி தாளாளர் வாசுகி. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிடுவோம். மாணவிகள் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும்" என்றார்.

" மாணவிகள் கொல்லப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், சீல் வைக்கப்பட்டக் கல்லூரியை திறக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன" என்கிறார் புரட்சிகர மாணவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கணேசன். அவர் நம்மிடம், " மாணவிகள் மரணம் தொடர்பான வழக்கை வேகப்படுத்த போலீஸார் விரும்பவில்லை. தொடக்கத்தில் கல்லூரி தாளாளருக்கு பிணை கொடுப்பதில் அரசுத் தரப்பில் எதிர்ப்பு காட்டினர். பின்னர் பெரிதாக எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. மாணவிகள் தற்கொலைதான் செய்து கொண்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. போலீஸார் பதிவு செய்த சந்தேக மரணம் என்ற வார்த்தை இன்னமும் அப்படியே இருக்கிறது.
கல்லூரியைப் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்த பிறகுதான், அந்த மாணவிகள் மர்மமான முறையில் இறந்து போனார்கள். வி.ஏ.ஓ முதல் துணைவேந்தர் வரையில் கல்லூரிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். தற்போது மருத்துவக் கவுன்சலிங்கில் எஸ்.வி.எஸ் கல்லூரி பெயரும் இடம்பெற்றுள்ளது. ' நேச்சுரோபதி நடத்துவதற்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. யோகா, ஹோமியோ நடத்துவதற்குத் தடை இல்லை' என்ற உத்தரவை வாங்கிவிட்டனர். மாணவிகள் மரணம் தொடர்பான வழக்கு, முடிவுக்கு வருவதற்கு முன்பே கல்லூரி செயல்படத் தொடங்கிவிட்டது. இது மிகுந்த வேதனையளிக்கிறது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்யப் போகும் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்" என்றார் விரிவாக.

No comments:
Post a Comment