இந்திய- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய தரப்பில் கேப்டன் கோலி 200 ரன்களும், தமிழக வீரர் அஸ்வின் 113 ரன்களும் குவித்தனர்.
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் 243 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ-ஆன் ஆனது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ், முகமது ஷமி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நேற்று 4வது நாள் ஆட்டத்தை துவங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வினின் சுழற்பந்தில் மேற்கிந்திய தீவுகள் நிலை குலைந்தது. 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். அஸ்வின் 17வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.

இந்த வெற்றி குறித்து கூறிய இந்திய கேப்டன் கோலி ஆசிய கண்டத்துக்கு வெளியே இந்தியாவின் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. அஸ்வின், யாதவ், ஷமியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. பேட்ஸ்மேன்களும் பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அஸ்வின் சிறப்பாக பேட்டிங் செய்வதால் அவரை 6வது இடத்தில் தொடர்ந்து களமிறக்கும் எண்ணம் உள்ளது என்று கூறினார்.
முதல் டெஸ்ட் புள்ளிவிவரங்கள்:
1. மேற்கிந்திய தீவுகளில் சதமடித்த மூன்றாவது இந்திய கேப்டன் விராட் கோலி. இதற்குமுன் கபில்தேவ் 100 ரன்களும், ட்ராவிட் 146 ரன்களும் குவித்துள்ளனர்.
2. கேப்டனாக 1000 ரன்களை 18 இன்னிங்க்ஸ்களில் கடந்துள்ளார் கோலி. இதன் மூலம் குறைந்த இன்னிங்க்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்ததில் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களை கடந்துள்ளார் கோலி.
3. மேற்கிந்திய தீவுகளில் ஒரே நாளில் அதிக ரன் குவித்த இரண்டாவது இந்திய வீரர் கோலி. இதற்குமுன் சேவக் 180 ரன்களை குவித்திருந்தார். மேலும் கேப்டனாக வெளி நாட்டில் கோலியின் 5வது சதம் இது. இதன் மூலம் அசாருதின் சாதனையையும் கோலி சமன் செய்துள்ளார்.

4. 84 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கேப்டன் ஒருவர் இந்தியாவுக்கு வெளியே இரட்டை சதமடிப்பது இதுவே முதல் முறை.
5. கோலியின் முதல் இரட்டை சதம் இது தான். இன்னும் அவர் முதல் தர போட்டிகளில் கூட இரட்டை சதமடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6. மேற்கிந்திய தீவுககளில் தான் ஆடும் முதல் போட்டியிலேயே சதமடித்த 4வது வீரர் அஸ்வின்.
7. இந்திய அணி 2008ம் ஆண்டுக்கு பிறகு 2வது விக்கெட் முதல் 7வது விக்கெட் வரை தொடர்ந்து ஆறு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியுள்ளது.
8. ஆசிய கண்டத்துக்கு வெளியே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இது. இதற்கு முன்னர் ஜிம்பாவேயில் இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே பெரிய வெற்றியாக இருந்தது.
9. ஆசிய கண்டத்துக்கு வெளியே அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சு இது தான்.
10. இந்திய கீப்பர் சஹா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் உதவியதன் மூலம் தோனி, சையத் கிர்மானியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

No comments:
Post a Comment