கோவை அருகே ரயில் பாதையைக் கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், படுகாயமடைந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளது.
கோவையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ரயில் மோதி ஒரு கர்ப்பிணி யானை உள்ளிட்ட 3 யானைகள் உயிர் இழந்தது. அதை தொடர்ந்து 2011-ல் ரயில் மோதி ஒரு யானை இறந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் அடுத்தடுத்து இரு யானைகள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தன. ரயில் மோதி அடுத்தடுத்து யானைகள் இறப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்க, இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கோவையில் இதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் இன்று(வெள்ளி) காலை நிகழ்ந்துள்ளது. இன்று காலை கோவையை அடுத்த வாளையார் பகுதியில், ரயில் பாதையை தனது குட்டியுடன் கடக்க முயன்றது பெண் யானை ஒன்று. அப்போது கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த 'வெஸ்ட்கோஸ்ட்' எக்ஸ்பிரஸ் ரயில், பாதையைக் கடந்து கொண்டிருந்த யானை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நிலையில் அந்த யானை வனத்துக்குள் சென்றுவிட்டது.

யானை மீது ரயில் மோதிய சம்பவம் தொடர்பாக உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துக்குள் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்திய வனத்துறையினர், வனத்தில் யானை படுகாயமடைந்து இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். ஆனால், மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கும் முன்னரே அந்த யானை பரிதாபமாக உயிர் இழந்தது.
இது தொடர்பாக ரயில்வே துறையினரிடம் பேசியபோது, ''யானைகள் ரயில் பாதையைக் கடக்கும் என சொல்லப்பட்ட பகுதியில் மிகவும் மெதுவாகவே ரயில் இயக்கப்படுகிறது. இன்று நடந்த சம்பவத்தின் போது, யானையைப் பார்த்ததும் இன்ஜினை நிறுத்த ரயில் டிரைவர் முயற்சித்துள்ளார். ஆனால், உடனடியாக ரயிலை நிறுத்த முடியாமல் அது யானை மீது மோதி இருக்கிறது. இதை ரயில்வே துறையின் அலட்சியம் என சொல்லி விட முடியாது" என்றனர். மீண்டும் ரயில் மோதி யானை இறந்துள்ள சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே மாங்கரை பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யானைக்குட்டி ஒன்று உலவி வருவது அனைவரிடத்திலும் பரபரப்பை எற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பன்றிக்கு வைத்த வெடியால் காயமடைந்த குட்டி யானை அது என கூறப்படுகிறது. அந்த குட்டி யானையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணியையும் வனத்துறையினர் வேகப்படுத்தி உள்ளனர்.இறந்த பெண் யானையை, பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment