மாதச் சம்பளம் வாங்குபவர்கள், சொந்தமாக தொழில் செய்பவர் என பலதரப்பிலும் நம்பிக்கை பெற்ற முதலீடாக இருப்பது ஏலச்சீட்டுதான். இந்த ஏலச்சீட்டு திட்டங்கள் பெரும்பாலும் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள், தெரிந்தவர்கள் நடத்துபவையாக இருக்கும். அவசர தேவைக்கு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும், குழந்தைகளின் பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு என பல்வேறு தேவைகளுக்காக இந்த சீட்டு திட்டங்களில் சேருகிறார்கள். இதுபோல் ஏலச்சீட்டு நடத்திய சில நிறுவனங்கள் மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளன. எனவே, ஏலச்சீட்டுத் திட்டத்தில் சேருவதற்கு முன் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
சீட்டு நிறுவனங்கள்!
ஏலச்சீட்டு போடுவதற்கு முன் அந்த சீட்டு திட்டத்தை யார் நடத்துகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் நடத்தும் சீட்டு திட்டங்கள் நாமும் சேர்ந்து விடுவோம். அவர்களை பற்றி எந்த விஷயமும் தெரிந்து கொள்வதில்லை. சீட்டு நடத்துபவர்கள் யார், எத்தனை ஆண்டுகளாக சீட்டு நடத்துகிறார்கள், பண விஷயத்தில் அவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதை பலரிடம் கேட்டு தெரிந்துக் கொள்வது நல்லது.
பதிவு அவசியம்!
ஏலச்சீட்டு நடத்த வேண்டும் எனில் அதற்கு முறையாக பதிவு செய்வது அவசியம். அதாவது எவ்வளவு தொகைக்கு சீட்டு நடத்த போகிறார்களோ அந்த தொகைக்கு டிடி எடுத்து பதிவு அலுவலகத்தில் கொடுத்து சீட்டை பதிவு செய்ய வேண்டும். அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு சீட்டு நடத்த வேண்டும் எனில் ஒரு லட்சம் ரூபாய்க்கு டிடி எடுத்து டெபாசிட் செய்வது அவசியம்.
பிட் எவ்வளவு!
ஏலச்சீட்டு நடத்துபவர்கள் குறிப்பிட்ட சதவிகித தொகையை ஒவ்வொரு மாதமும் எடுப்பார்கள். இந்த தொகையில் சீட்டு நடத்துவது இதர செலவுகளை பார்த்துக் கொள்வார்கள். பதிவு செய்யப்படாத சீட்டு திட்டங்களில் சீட்டு நடத்துபவர்கள் அந்த தொகையை எடுத்துக் கொள்வார்கள். அதாவது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தொகையை சீட்டு நடத்துபவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ரூ.1000 சீட்டுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.300 விதம் எடுத்துக் கொள்வார்கள்.
சீட்டு பணம் திரும்ப கொடுக்கும் நாள்!
ஒவ்வொரு மாதமும் சீட்டை எடுத்தவர்களுக்கு சீட்டு தொகையை கொடுக்க வேண்டும். இந்த தொகை சீட்டு ஏலம் விட்டு எத்தனை நாட்களில் திரும்ப தருவார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் சில நேரங்களில் ஓரிரு மாதம் கழித்துக்கூட தருவார்கள். பதிவு செய்யாத சீட்டு நிறுவனங்களில் இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பது கடினம். அதேபோல பதிவு செய்த சீட்டு நிறுவனங்கள், பணத்தை வாங்க வேண்டுமெனில் இரண்டு அரசு அதிகரிகளிடம் கையெழுத்து வாங்க வேண்டும். சீட்டு தொகைக்கு ஈடாக ஏதாவது அடமானம் தர வேண்டும் என கூறுவார்கள்.

No comments:
Post a Comment