பிப்லாப் கேடன் பால் (Biplap Ketan Paul), 40,000 ஏக்கர் வறண்ட நிலத்தை இன்று விவசாய பூமியாக மாற்றி இருப்பவர்!
ஆம், குஜராத்தை சேர்ந்த தொழிலதிபரான பிப்லாப் கேடன் பால் புதிதாக ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதன் பெயர் "புங்க்ரூ". புங்க்ரூ என்றால் பைப் என்று அர்த்தம். புங்க்ரூ பைப்களை நிலத்தில் செருகி ஒரு குறிப்பிட்ட முறையில் மழைநீரைச் சேகரிப்பதன் மூலம், நிலத்தில் உள்ள உப்புத்தன்மையைக் குறைக்க முடியும். இதுதான் பிப்லாப் கேடனின் கண்டுபிடிப்பு.
2012ல் வறண்ட வட குஜராத்தை, வளம் மிக்க ஒரு மாநிலமாக மாற்றியதற்காக, இவருக்கு 'அணில் ஷா கிராம் விகாஸ் பரிதோஷிக்' என்ற விருது வழங்கப்பட்டது. இவரது புங்க்ரூ என்ற திட்டத்தின் கீழ், நிலத்தில் உள்ள உப்புத்தன்மையை நீக்குவதோடு, குறைந்தளவு நீரைப் பெறும் நிலத்தில் செழுமையாக விவசாயம் செய்ய முடிகிறது. இந்த தொழில்நுட்பத்தால், வருடத்திற்கு மூன்று விதமான பயிர்களை விளைவிக்க முடிவதால், விவசாயிகள் நல்ல வருமானத்தைப் பெறுகின்றனர்.
இவரது திட்டத்தின்மூலம் சுமார் 14,000 விவசாயிகள் இதுவரை பயனடைந்துள்ளனர். 40,000 ஏக்கர் வறண்ட நிலத்தை விளைநிலமாக மாற்றியுள்ள பிப்லாப் கேடன் தன் சாதனையைப்பற்றி அலட்டிக்கொள்ளாத மனிதராக இருக்கிறார். " நீர் மிகவும் சக்திவாய்ந்தது. அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது!". என்று கூறும் பிப்லாப் கேடனின் வயது 46.
புங்க்ரூ திட்டத்தின்மூலம் 40 மில்லியன் லிட்டர் மழை நீரை நிலத்தடியில் சேமிக்க முடியும். ஒரே ஒரு புங்க்ரூவில் வெறும் 10 நாட்கள் மட்டுமே நீர் சேமிக்கப்படுகிறது. காரணம், குஜராத்தில் மழை பொழியும் நாட்கள் மிகவும் குறைவு. ஆனால், இந்த நீரை உபயோகித்து, ஏறத்தாழ 25 வருடங்களுக்கு, ஒரு போகத்திற்கு இரு வகைப் பயிர்களை அறுவடை செய்து, விவசாயிகளின் குடும்பங்கள் கவலையின்றி வாழலாம். மேலும், புங்க்ரூவால் நிலத்தின் உப்புத்தன்மை குறைக்கப்படுவதால், விவசாயத்திற்கு மேலும் மேலும் அது பயன்படுகிறது.

தற்போது, புங்க்ரூ பைப் 17 வடிவமைப்பில் ரூ.4 லட்சம் முதல் ரூ. 22 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. மழை, பயிர், மண்வளம் உள்ளிட்ட 29 காரணிகளுக்கு தக்கபடி இந்த வடிவமைப்புகள் மாறுபடுகின்றன. ஒரு புங்க்ரூ யூனிட் 15 ஏக்கர் நிலப்பரப்பிற்கான நீரைச் சேமிக்கிறது.
பிப்லாப் தனது சாதனைகளுக்காக Ashoka Globaliser Award for Innovation, மற்றும் World Bank, Commonwealth, United Nations Framework Convention on Climate Change, Asian Development Bank முதலிய சர்வதேச அமைப்புகளில் இருந்து பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். பிப்லாப் கேடன் விவசாயத்திற்கு செய்த நற்செயல்களைக்காட்டிலும் இன்னொரு விஷயத்திலும் பாராட்டுக்குரியவர். ஆம்...இத்திட்டத்தை முதன்மையாகச் செயல்படுத்துவது முழுக்க முழுக்க பெண்கள்.

காலத்திற்கேற்றபடி விவசாயத்தில் நவீனமுறைகளை புகுத்தாமலும் விவசாயம் பொய்த்துப்போவதில் உள்ள சிக்கல்களை களையாமலும் விவசாயம் தழைக்கவில்லையென்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்ட பிப்லாப் கேடன் நிச்சயம் விவசாயிகளின் நண்பன்தான் அதில் சந்தேகமில்லை!

No comments:
Post a Comment