Monetize Your Website or Blog

Saturday, 4 June 2016

'சோக சம்பவ இடத்திலும் திருடுகிறார்களே!' -வேதனையுடன் இளைஞர்கள்

விபத்து நடத்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதால், சோக சம்பவம் நடந்த இடத்திலும் திருடுகிறார்களே என மனவேதனை அடைந்து அவர்கள் காவல் நிலையத்தை நாடி உள்ளனர்.

ஓசூர் அருகே நேற்று பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி ஆனார்கள் 27 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடமான மேலுமலை பகுதியில், இந்த விபத்தை பார்த்ததும் அந்த வழியாக சென்ற இளைஞர்கள் பலர் தங்களின் மோட்டார்சைக்கிள்களை சாலையோரம் நிறுத்திவிட்டு மீட்புப்பணிகளில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அவர்கள் மீட்புப்பணிகளை முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



மொத்தம் 10 பேரின் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மோட்டார் சைக்கிள்களை இழந்த இளைஞர்கள், 'சோக சம்பவம் நடந்த இடத்திலும் திருடுகிறார்களே' என்று கூறியபடியே வேதனையுடன் காவல் நிலையத்தை நாடி உள்ளனர்.

மேலும், விபத்தில் சிக்கிய பஸ்சுக்கு, கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் மாலூருக்கு செல்ல உரிமம் (பெர்மிட்) வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக இந்த பஸ் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறாது. இந்நிலையில், ஓசூரைச் சேர்ந்த விஸ்வநாத் என்பவர் இந்த பஸ்சை வாங்கி நேற்று தான் முதல் முறையாக இயக்கி இருக்கிறார்.

இதற்காக, கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று மதியம் 1.45 மணிக்கு முதல் இயக்கத்தை பஸ் தொடங்கி இருக்கிறது. ஆனால், புறப்பட்ட 20 நிமிடத்திலேயே பஸ் விபத்துக்குள்ளாகி கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்தபோது லாரியின் முன் இருக்கையில் மதுபாட்டில்கள் இருந்தன. பாதி மதுவை குடித்த நிலையில் ஒரு பாட்டில் கிடந்தது. எனவே, டிரைவர் மது குடித்துவிட்டு லாரியை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.




No comments:

Post a Comment