மத்திய அரசு ஆடைத் தொழிலுக்கு அறிவித்துள்ள சிறப்புத் தொகுப்பில் முதலாளிகளுக்கே சலுகை அளித்துள்ளதாகவும், தொழிலாளர் விரோத அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அனைத்து பனியன் தொழிற்சங்கத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் ஏ.ஐ.டி.யு.சி பனியன் சங்க அலுவலகத்தில் அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், ''கடந்த ஜூன் 22-ம் தேதி மத்திய அமைச்சரவை ஆயத்த ஆடைத் தொழிலுக்கான சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆடை ஏற்றுமதி தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள முதலாளிகளுக்கான இந்த சலுகைகளில், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற அடிப்படை வேலை நேரம், வருங்கால வைப்பு நிதி, நிரந்தரத் தொழிலாளர் போன்ற உரிமைகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுள்ளன.
ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவான சம்பளம் பெரும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சேருவது அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது என்ற அறிவிப்பு தொழிலாளர்களின் எதிர்கால சமூகப் பாதுகாப்பை அழித்துவிடும்.
தற்போது மிகை நேரம் (ஓவர்டைம்) வேலைக்கான சட்டம் இருக்கும்போதே அதை முதலாளிகள் மீறுகின்றனர். இந்நிலையில், இந்த சட்டத்திலும் அவர்களுக்குச் சலுகை வழங்குவது எதிர்காலத்தில் 8 மணி நேர வேலை என்ற அடிப்படையையே கேள்விக்குறியாக்கும்.
'பருவகாலத் தொழில்' என்று ஆடைத் தொழிலை வரையறுத்திருப்பது எதார்த்த உண்மைக்கு எதிரானதாகும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை தர வேண்டிய அவசியம் இல்லை என மறைமுமாகக் கூறப்பட்டுள்ளது. வேலை நாட்களைத் தளர்த்தி, வரையறுக்கப்பட்ட நாட்களுக்கு வேலை வழங்கலாம் என்று சொல்லியிருப்பது நிரந்தரத் தொழிலாளர் என்ற சட்ட உரிமையைத் தகர்த்து, தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும்.
குறிப்பாக, திருப்பூர் பனியன் தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு முறையாக, முழுமையாக இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் செய்யாத நிலைமை நிலவுகிறது. இத்தகைய சூழலில் மத்திய அரசு அறிவித்திருக்கும் மேற்கண்ட அம்சங்கள் தொழிலாளர்களைக் கூடுதல் நேரம் கடுமையாக வேலை வாங்கவும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச உரிமைகளையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.
எனவே, மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான இந்த அனைத்து அம்சங்களையும் ரத்து செய்ய வேண்டும், மேலும் இது போன்ற விஷயங்களில் தொழிற்சங்கங்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முதலாளிகளுக்கு ஆதரவான நிலை எடுக்கும் போக்கையும் கைவிட வேண்டும்'' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக திருப்பூர் தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

No comments:
Post a Comment