Monetize Your Website or Blog

Friday, 1 July 2016

மூன்றாண்டு போதாது... கிளம்பும் வேளையில் நான்காண்டு கேட்கும் ரகுராம் ராஜன்!

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியை நான்கு ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும் என ரகுராம் ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் ரகுராம் ராஜன். இவரது பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது.

இந்நிலையில், இவர் உண்மையான இந்தியர் இல்லை, இவர் கவர்னராக பொறுப்பேற்ற பின்னர் இந்திய பொருளாதாரம் பின்தங்கி விட்டது என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி எம்.பி, ரகுராம் ராஜனை கவர்னர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதைத்தொடர்ந்து, " நான் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் நீடிக்கப்போவதில்லை. ஆசிரியர் பணியை செய்யவே விரும்புகிறேன்" என ரகுராம் ராஜன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் ரகுராம் ராஜனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், ரகுராம் ராஜனுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி வீரப்ப மொய்லி தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரகுராம் ராஜன், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியதால், இந்திய பொருளாதாரத்தில் ஏற்படப் போகும் தாக்கம் குறித்து எடுத்துக் கூறினார்.

மேலும், ''இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி காலம் மூன்று ஆண்டு என்பது மிகவும் குறைவு. எனவே, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் கடைபிடிப்பது போல், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியையும் நான்கு ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும்.

இந்திய வங்கிகளில் போதுமான பணம் இருந்தும், அவர்கள் கடன் அளிப்பது இல்லை. தனியார் வங்கிகளை விட, அரசு வங்கிகள் மிகவும் மோசமாக செயல்படுகிறது'' என்றார்.





No comments:

Post a Comment